MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அழகான ராட்சசியே... மெல்லிய சேலையில் மெருகேறிய அழகுடன் கியூட் போஸ் கொடுத்த திரிஷா - டிரெண்டாகும் போட்டோஸ்

அழகான ராட்சசியே... மெல்லிய சேலையில் மெருகேறிய அழகுடன் கியூட் போஸ் கொடுத்த திரிஷா - டிரெண்டாகும் போட்டோஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் பூஜைக்கு சேலை அணிந்து வந்த நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Feb 03 2023, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை திரிஷாவுக்கு 2022-ம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். மணிரத்னம் இயக்கிய அப்படத்தில் குந்தவை என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

25

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் திரிஷா. இப்படத்துக்கு பின்னர் திரிஷா நடிக்க கமிட் ஆன திரைப்படம் தான் தளபதி 67.

35

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. ஏற்கனவே கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த திரிஷா, தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேறலெவலில் எகிறி உள்ளது.

இதையும் படியுங்கள்... 'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

45

தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். நடிகை திரிஷாவும் அவர்களுடன் சென்றிருந்தார். அங்கு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த உள்ளனர்.

55

இதனிடையே தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரல் ஆன நிலையில், அந்த பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் சேலையில், அழகு தேவதையாக மிளிரும் திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.

இதையும் படியுங்கள்... ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் பூஜா ஹெக்டே - வைரல் கிளிக்ஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
4 ஹிட் 18 பிளாப்... அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!
Recommended image2
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
ரீ-ரிலீஸில் கில்லியிடம் தோற்றுப்போன மங்காத்தா... பாக்ஸ் ஆபிஸ் ஆட்டம் ஓவர் - ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved