ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் பூஜா ஹெக்டே - வைரல் கிளிக்ஸ் இதோ
தமிழில் பீஸ்ட், முகமூடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே ஜிகுஜிகு உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழிலும் மிஷ்கின் இயக்கிய முகமுடி, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா. இது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
இதுதவிர தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் பூஜா ஹெக்டே. இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க உள்ளார். இதில் பூஜா ஹெக்டே உடன் மலையாள நடிகை சம்யுக்தா மேனனும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கிளாமருக்கு லீவு விட்டு... பட்டுச் சேலையில் குடும்ப குத்து விளக்காக மிளிரும் பூஜா ஹெக்டே - வைரலாகும் போட்டோஸ்
இப்படி சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, போட்டோஷூட் நடத்துவதிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் பட்டுச் சேலையில் புதுமணப் பெண் போல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகின.
இந்நிலையில், தற்போது தன் அண்ணனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது கிளாமர் உடை அணிந்து கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே, அதிலும் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாக்களில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஓடிடி-யில் மோதலை தவிர்த்த விஜய் - அஜித்... துணிவு மற்றும் வாரிசு படங்களின் OTT ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு