'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!
'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.
தளபதி விஜய் 'வாரிசு' படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், அடுத்ததாக தான் நடிக்க உள்ள 67வது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் குறித்து அண்மையில், இந்த படத்தை தயாரித்து வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், அறிக்கை வெளியிட்டு தெரிவித்ததை தொடர்ந்து, அவ்வபோது இப்படம் குறித்த முக்கிய அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில், இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்தியூஸ் தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆகியோர் நடிப்பது உறுதியானது.
இதை தொடர்ந்து நேற்றைய தினம், 'தளபதி 67' படத்தின் பூஜை படங்களும் வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தளபதி விஜய் மிகவும் எளிமையாக, ஸ்டைலிஷ் தோற்றத்தில் பட பூஜையில் கலந்து கொண்ட நிலையில், நடிகை த்ரிஷாவும் மிகவும் எளிமையாக கோல்டன் என சேலையில் ரசிகர்களை வசீகரித்தார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!
இப்படத்தின் ஷூட்டிங் ஒரு புறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, 50 சதவீதம் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே விற்பனை பணிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் பட, தளபதி 67 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனமும் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை 7 ஸ்கிரீன் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடிப்பதால் 'தளபதி 67' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் 62 ஆவது படத்தை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதை தொடர்ந்து 'தளபதி 67' படத்தையும் கைப்பற்றியுள்ளதால், கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு தமிழ் படங்களை கைப்பற்றுவதில், நெட்பிளிக்ஸ் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.