ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்..! கல்யாணத்திற்கு தயாரான ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் RC15 படத்தில் நடித்து வரும் நடிகை கியாரா அத்வானி திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

kiara advani and sidharth malhotra marriage latest news

நடிகர் சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக் படமான 'எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் சாக்ஷி வேடத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை கியாரா அத்வானி. இதைத்தொடர்ந்து, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறிய கியாரா, சமீப காலமாக பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக, கடந்த ஓரிரு வருடங்களாக கிசுகிசுத்து வரும் நிலையில், அடுத்தகட்டத்திற்கு தங்களின் உறவை எடுத்து செல்ல இருவரும் முடிவு செய்துள்ளதாகவும், எனவே வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kiara advani and sidharth malhotra marriage latest news

இருவருமே தங்களின் திருமணம் குறித்து இதுவரை, வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கியாரா தங்களின் திருமண உடை குறித்து, விவாதிப்பதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் ஷர்மாவை அவருடைய வீட்டில் சந்தித்து விவாதித்துள்ளர். இதற்காக அவர் வந்து சென்ற சில வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராய்யின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!

kiara advani and sidharth malhotra marriage latest news

இவர்களின் திருமணம், ராஜஸ்தானில் உள்ள  ஜெய் சாலிமர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரையுலகை சேர்ந்த நெருங்கிய பிரபலங்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதே நேரம்... இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனங்களுக்கு கொடுப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பை இவர்கள் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காளிகாம்பாள் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை ஹன்சிகா..! மனம் உருகி வேண்டி கொண்ட புகைப்படங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios