MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கீர்த்தி சுரேஷ் ரகசியமா பொத்தி பொத்தி பாதுகாத்த விஷயம் லீக் ஆகிடுச்சு; விரைவில் வரும் குட் நியூஸ்!

கீர்த்தி சுரேஷ் ரகசியமா பொத்தி பொத்தி பாதுகாத்த விஷயம் லீக் ஆகிடுச்சு; விரைவில் வரும் குட் நியூஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அண்மையில் திருமணம் ஆன நிலையில், அவர் சீக்ரெட்டாக வைத்துள்ள விஷயம் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 19 2025, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Keerthy Suresh’s Jackpot Deal Remains a Secret – Fans Eager for Official Reveal! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து கரம்பிடித்தார் கீர்த்தி. இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ, நடிகை திரிஷா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி.

24
Keerthy Suresh Husband

Keerthy Suresh Husband

கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட்டில் தான் பிசியாக நடிக்கிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பேபி ஜான் திரைப்படம் தமிழில் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும். பேபி ஜான் படத்தை அட்லீ தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்.... திருமணத்திற்கு பின் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய கீர்த்தி சுரேஷ்!

34
Keerthy Suresh Bollywood Movie

Keerthy Suresh Bollywood Movie

பேபி ஜான் படம் தோல்வி அடைந்தாலும் அதில் கீர்த்தியின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு வழங்கி வருகிறார்களாம். அந்த வகையில் தற்போது அக்கா என்கிற வெப் தொடரில் நடித்திருக்கிறார் கீர்த்தி. அந்த வெப் தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசரில் மாஸ் லுக்கில் காட்சியளித்தார் கீர்த்தி. இது வரலாற்று கதையம்சம் கொண்ட வெப் தொடராக உருவாகி இருக்கிறது.

44
Keerthy Suresh New Movie

Keerthy Suresh New Movie

இதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷுக்கு மற்றுமொரு ஜாக்பாட் வாய்ப்பும் பாலிவுட்டில் கிடைத்துள்ளதாம். அவர் இந்தியில் உருவாகும் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். ஆனால் அதுபற்றி வெளியில் வாய்திறக்காமல் கப் சிப்னு இருக்கிறார் கீர்த்தி. அவர் ரகசியமாக பொத்தி பொத்தி பாதுகாத்த இந்த விஷயம் தற்போது லீக் ஆகி உள்ளது. ஆனால் அவருடன் யார் நடிக்கிறார்கள், அப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற விவரங்கள் மிகவும் சீக்ரெட்டாகவே உள்ளதாம். விரைவில் தான் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த குட் நியூஸை கீர்த்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Keerthy Suresh: 47 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன இயக்குனர்! காரணம் யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved