- Home
- Cinema
- Keerthy Suresh: 47 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன இயக்குனர்! காரணம் யார் தெரியுமா?
Keerthy Suresh: 47 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன இயக்குனர்! காரணம் யார் தெரியுமா?
பிரபல இயக்குனர் ஒருவர், விஷாலுக்காக கீர்த்தியிடம் திருமணம் குறித்து பேசியதாக வெளிப்படையாக கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் காதலருடன் திருமணம்:
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போனதாக அவரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
வாரிசு நடிகை கீர்த்தி சுரேஷ்:
நடிகர் - நடிகைகளின் வாரிசுகள் திரைப்படங்களில் நடிக்க வந்த வேகத்தில், திரையுலகை விட்டு நடையைக்கட்டி வரும் நிலையில், போராடி முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரின் தாயானர் மேனகா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர். அதே போல் தந்தை சுரேஷும் ஒரு தயாரிப்பாளர் என்பதால், கீர்த்தி சுரேஷுக்கு ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு எளிதில் கிடைத்தாலும், வெற்றிக்காக பல போராட்டங்களை எதிர்கொண்டார்.
தாலியை கழட்டிய கீர்த்தி சுரேஷ்; போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
மகாநடி படத்தில் தன்னை நிரூபித்த கீர்த்தி:
குறிப்பாக தமிழில் பாடி சேமிங், இவரது சிரிப்பு, நடிப்பு, முதல் பட தோல்வியால் ராசி இல்லாத நடிகை என ஆரம்ப காலத்தில் இவர் எதிர்கொண்ட விமர்சனங்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால் இப்படி பட்ட விமர்சனங்களுக்கு 'மகாநடி' என்கிற ஒற்றை படத்தில், தரமான பதிலடி கொடுத்தார்.
தோல்வியை கொடுத்த பேபி ஜான்:
தென்னிந்திய திரையுலகை தாண்டி பாலிவுட் படங்களிலும் கால்பதித்த கீர்த்தி சுரேஷுக்கு, பேபி ஜான் தோல்வியை கொடுத்தது. திருமணத்திற்கு பின்னர், எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் கீர்த்தி இருப்பதால் திரையுலகை விட்டு விலகுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கல்யாணத்திற்கு பிறகு திருமண வாழ்க்கை எப்படி? கணவர் பற்றி பேசிய கீர்த்தி சுரேஷ்!
சண்டக்கோழி 2 திரைப்படம்:
இது ஒருபுறம் இருக்க தற்போது கீர்த்தி சுரேஷை, விஷாலுக்கு பெண் கேட்ட தகவல் பற்றி இயக்குனர் லிங்குசாமி கூறி உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, விஷாலை வைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்த இரண்டாவது பாக திரைப்படம் தான் 'சண்டக்கோழி 2'. விஷாலின் 25-ஆவது படமாக இந்த படம் வெளியான நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
கீர்த்தியை விஷாலுக்கு பெண் கேட்ட லிங்குசாமி:
கீர்த்தி சுரேஷ் அனைவரிடமும் அன்பாகவும், மரியாதையுடனும் பழகுவதை பார்த்த விஷாலின் தந்தை கீர்த்தியை விஷாலுக்கு பெண் கேட்டு பாருங்கள் என கூறியுள்ளார். அவர் சொன்னதற்காக லிங்கு சாமியும் கீர்த்தியின் வீட்டுக்கு சென்றாராம். கீர்த்தி, லிங்கு சாமியை பார்த்து என்ன சார் இவ்வளவு தூரம் என கேட்க, விஷாலின் தந்தை உங்களை பெண் கேட்டு பார்க்க சொன்னார். உங்கள் விருப்பம் என்ன என்று கேட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷை விட இத்தனை வயது மூத்தவரா ஆண்டனி? வெளிவந்த 15 வருட காதல் கதை
காதலை வெளிப்படையாக கூறிய கீர்த்தி
உடனே கீர்த்தி சார், நான் ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே ஒருத்தரை காதலிக்கிறேன் என்கிறார். இப்போ அவரை தான் கீர்த்தி திருமணமும் செய்துள்ளார். கீர்த்தியின் வளர்ச்சிக்கு அந்த பையன் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். கீர்த்தியின் திருமணம் 3 நாள் கோவாவில் நடந்த நிலையில் நானும் அங்கு சென்றேன். மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கீர்த்தி அழைப்பு விடுத்திருந்ததாகவும் பேசி உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.