MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? - பிரபல நடிகையின் டுவிட்டால் குழந்தை பிறந்த கையோடு சர்ச்சையில் சிக்கிய நயன்

தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? - பிரபல நடிகையின் டுவிட்டால் குழந்தை பிறந்த கையோடு சர்ச்சையில் சிக்கிய நயன்

திருமணமான நான்கே மாதத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 09 2022, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இடையே இவர்கள் இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவ்வாறு சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பிரபலங்கள் புடைசூழ பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

திருமணத்துக்கு பின்னர் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று வந்த இந்த ஜோடி, சினிமாவிலும் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இடையே நடிகை நயன்தாரா புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகாததால், அவர் சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு திருமணத்துக்கு பின்னரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஜோடியாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வலம் வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நயனும் - நானும் அம்மா & அப்பா ஆகிட்டோம்..! இரட்டை குழந்தைகள் புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்!

34

இந்நிலையில், திருமணமான நான்கே மாதத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது இந்த ஜோடி. நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என ஏராளமானோர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி நயன்தாரா ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

44

இதன்மூலம் அவர்கள் திருமணம் ஆகும் முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளது உறுதியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, நடிகை கஸ்தூரி தற்போது புது குண்டை தூக்கி போட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைபாடுகள் உள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... நயன்தாராவின் திடீர் முடிவு... மருத்துவர்கள் கூறியது இது தான்..? குண்டை தூக்கி போட்ட பயின்வான் ரங்கநாதன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved