MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

This Week Theatre and OTT Releases : இந்த வாரம் தியேட்டரில் கருப்பு திரைப்படம் ரிலீஸ் அக உள்ளது. இதுதவிர ஓடிடியில் எக்ஸாம் என்கிற தமிழ் வெப் சீரிஸும் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 11 2026, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தியேட்டரில் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கருப்பு
Image Credit : instagram/Suriya Sivakumar

தியேட்டரில் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கருப்பு

வழக்கமாக வார வாரம் அரை டஜன் படங்கள் போட்டிபோட்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகும். அதுவே பெரிய படங்கள் ஏதாச்சும் ரிலீஸ் ஆனால், அதற்கு போட்டியாக எந்த படமும் வராது. அந்த ஒரு நிலைமை தான் இந்த வாரமும் உள்ளது. அதன்படி வருகிற மே 14-ந் தேதி நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் நீண்ட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. அதை அப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்கள்
Image Credit : Asianet News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்கள்

எக்ஸாம் (Exam)

தேர்வு வினாத்தாள் லீக் செய்யும் மாஃபியாவை அம்பலப்படுத்த முயற்சிக்கும் ஒரு இளம் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் தொடர் இது. கல்வி முறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நெட்வொர்க்கை இந்தத் தொடர் காட்டுகிறது. வருகிற மே 15ந் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

பெர்லின் சீசன் 2 (Berlin Season 2)

'Money Heist'-ன் ஸ்பின்-ஆஃப் தொடரான 'பெர்லின்' முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது இரண்டாவது சீசனில், பெர்லின் ஒரு பெரிய கொள்ளைக்குத் திட்டமிடுகிறார். இந்த முறை லியோனார்டோ டா வின்சியின் ஒரு மாஸ்டர்பீஸ் ஓவியத்தைத் திருட முயற்சிப்பதே கதையின் முக்கிய பகுதி. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்த தொடர் மே 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

டெவில் மே க்ரை சீசன் 2 (Devil May Cry Season 2)

டெமன் ஹன்டர் டான்டேவின் கதை தொடரும் இந்த அனிமேஷன் தொடரின் இரண்டாவது சீசன், இன்னும் டார்க் ஆக்‌ஷனுடன் வருகிறது. தன் குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் டான்டேவின் பயணம் இந்த சீசனில் மேலும் தீவிரமடைகிறது. மே 12ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Related Articles

Related image1
பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!
Related image2
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
34
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : X

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

துரந்தர் 2 (Dhurandhar 2)

ரன்வீர் சிங் நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வருகிற வெள்ளிக்கிழமை ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

கர்தவ்யா (Kartavya)

சைஃப் அலி கான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் தனது குடும்பம் மற்றும் கடமைக்கு இடையில் சிக்கித் தவிக்கிறார். குடும்பத்திற்கு ஆபத்து வரும்போது அவர் எடுக்கும் முடிவுகளே இந்தக் கதையின் முக்கிய அம்சம். எமோஷன், ஆக்‌ஷன் இரண்டும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நெட்ஃபிளிக்ஸில் மே 15ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

44
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

தி பனிஷர்: ஒன் லாஸ்ட் கில் (The Punisher: One Last Kill)

ஃபிராங்க் கேஸில் தனது பழிவாங்கும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் போது, மற்றொரு ஆபத்தான சம்பவம் அவரை மீண்டும் போர்க்களத்திற்குள் இழுக்கிறது. ஆக்‌ஷன் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கும். மே 12 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

தி வொண்டர்ஃபூல்ஸ் (The Wonderfools)

பார்க் யுன்-பின் மற்றும் சா யுன்-வூ நடித்துள்ள இந்த கொரிய தொடரில், சூப்பர் பவர்ஸ் கொண்ட சிலர் அதை கட்டுப்படுத்த முடியாமல் சந்திக்கும் சிக்கல்களைக் காட்டுகிறார்கள். ஃபேண்டஸி, காமெடி, டிராமா கலந்த தொடராக இது உருவாகியுள்ளது. மே 15ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
ஓடிடி
சூர்யா 45

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Recommended image2
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Recommended image3
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Related Stories
Recommended image1
பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!
Recommended image2
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved