MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!

பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!

Trisha Intentionally Snubbed: 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்ப, ஷாக்கிங் பதில் கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கருப்பு இசை வெளியீட்டு விழா
Image Credit : instagram /@trishakrishnan

கருப்பு இசை வெளியீட்டு விழா

சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது வெறும் நிகழ்ச்சி மட்டும் அல்லாமல், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தும் முக்கியமான புரமோஷன் மேடையாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட முக்கிய நிகழ்வாக தான் கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகப் பிரம்மாண்டமாக கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்த படத்தில் பணியாற்றிய முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

25
த்ரிஷா மட்டும் கலந்துகொள்ளவில்லை:
Image Credit : instagram /@trishakrishnan

த்ரிஷா மட்டும் கலந்துகொள்ளவில்லை:

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில், படத்தின் ஹீரோவாக நடித்துள்ள சூர்யா கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதோடு, இயக்குநர் மற்றும் நடிகரான RJ பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தைப் பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். மொத்தத்தில், படக்குழுவினர் முழுமையாக கலந்து கொண்ட ஒரு முக்கிய விழாவாக அது அமைந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், படத்தின் நாயகியான த்ரிஷா மட்டும் கலந்துகொள்ளவில்லை.

35
த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் இடையே பிரச்சனை?
Image Credit : Special Arrangement

த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் இடையே பிரச்சனை?

ஒரு பெரிய படத்தின் முக்கிய நடிகை இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகக் கேள்விகளை எழுப்பியது. த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை காரணமாகவே இவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. ஆனால் இதற்கு படக்குழு தரப்பில் இருந்தும், நடிகை த்ரிஷா தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை.

45
எனக்கு அழைப்பே வரவில்லை
Image Credit : trisha twitter

எனக்கு அழைப்பே வரவில்லை

இவ்வாறு பல்வேறு யூகங்கள் பரவி கொண்டிருந்த நிலையில், த்ரிஷா தற்போது இதற்கு நேரடியாக பதில் அளித்துள்ளார். ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில், “ஏன் ஆடியோ லாஞ்சுக்கு வரவில்லை?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு த்ரிஷா அளித்த பதில் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. “எனக்கு அழைப்பே வரவில்லை” என்று பதிலளித்தார். படக்குழுவுடன் இருந்த பிரச்சனையை காரணமாக, பிளான் போட்டு தான் அவர்கள் த்ரிஷாவை படவிழாவுக்கு அழைக்கவில்லை என ரசிகர்கள் தற்போது தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

55
நானும் மறந்துவிட்டேன்:
Image Credit : trisha twitter

நானும் மறந்துவிட்டேன்:

இதற்கிடையில், படக்குழு த்ரிஷாவுக்கு மட்டும் தனியாக ஒரு டீசரை வெளியிட்டது. இது வழக்கமாக பெரிய படங்களில் நடக்கும் ஒரு புரமோஷன் ஸ்ட்ராட்டஜி என்றாலும், இந்த சூழ்நிலையில் அது மேலும் பேசுபொருளாக மாறியது. அந்த டீசர் வெளியான பிறகு, நெட்டிசன் ஒருவர் “இந்த படத்தில் த்ரிஷா இருப்பதையே நான் மறந்துவிட்டேன்” என்று கமெண்ட் செய்தார். அதற்கு த்ரிஷாவும் “நானும் மறந்துவிட்டேன்… இப்போதாவது அவர்கள் ரிமைண்டர் செட் செய்தார்களே” என்று சற்றே கிண்டலாக பதிலளித்தார். இந்த பதில் ரசிகர்களிடையே வைரலாக பரவி, இந்த விவகாரம் குறித்து இன்னும் அதிகமாக பேச வைக்கிறது. படத்தின் ரிலீசுக்கு பின்னராவது சக்ஸஸ் விழாவில் த்ரிஷா கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
சூர்யா
சூர்யா 45
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வசூல் வேட்டையில் பாகுபலியை வீழ்த்திய துரந்தர் 2.. எவ்வளவு வசூல் தெரியுமா?
Recommended image2
ரஜினி படத்தை இயக்குவதில் சுந்தர் சி-க்கு ஏற்பட்ட பிரச்சனை - தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது குறித்து ஓபன் டாக்!
Recommended image3
விஜய்காக பிரபல ஹீரோயினுடன் சண்டைக்கு சீறிய த்ரிஷா - இந்த கதை தெரியாம போச்சே?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved