கருணாஸ் பட நடிகை நவ்னீத் கவுர் எம்.பி... உட்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நவ்னீத் கவுர்.

தமிழை தவிர, தெலுங்கு திரையுலகத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அறியப்பட்டவர்.

திருமணத்திற்கு பின் ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகி தற்போது அரசியல் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தற்போது மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி ஆக உள்ளார். இவருடைய கணவர் ரவி ராணாவும் எம்.எல்.ஏ ஆவார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரோனா பாதிக்கு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருடைய மகன், மகள், சகோதரி, மாமியார் உட்பட 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் நவ்னீத் கவுருக்கு கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தாலும், அதன் பின்னர் எடுத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படியும், மருத்துவர்கள் ஆலோசனை படியும் தங்களை தாங்களே தனிமை படுத்திகொண்டு உரிய சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இந்த தகவலை நவ்னீத் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.