வெள்ளை நிற வெட்டிங் கவுனில் தேவதை போல் இருக்கும் கருணாஸ் மகள் டயானா..! வெளியான திருமண போட்டோஸ்..!
கருணாஸ் மகள் டயானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவரின் வெட்டிங் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'நந்தா' படத்தில், லொடுக்கு பாண்டி என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் கருணாஸ்.
இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில்... 2002 ஆம் ஆண்டு மட்டும் 10 படங்கள் வெளியானது. இதில் பாபா, காதல் அழிவதில்லை, வில்லன், ஏப்ரல் மாதத்தில், பாலா போன்ற படங்களில் கருணாஸின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.
காமெடியை தாண்டி... காமெடியை அடிப்படியாக கொண்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் கருணாஸ். அந்த வகையில் இவர் நடித்த, அம்பா சமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் ஹீரோவாக நடித்து தயாரித்த ரகளபுரம், சண்டா மாமா போன்ற படங்கள் தோல்வியை தழுவியதால், ஹீரோவாக நடிக்கும் முடிவை கைவிட்டு விட்டு... மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பை பாடகர், , இசையமைப்பாளர், தயாரிப்பாளர், மற்றும் அரசியல்வாதி என பன்முக திறமையோடு விளங்கும் கருணாஸ், பாடகியான கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு, டயானா என்கிற மகளும் கென் என்கிற மகனும் உள்ளனர். கருணாஸின் மகள் டயானா பல் மருத்துவராக உள்ள நிலையில், கென்... நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.
இந்நிலையில், கருணாஸின் மகள் டயானாவிற்கும்... பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ருத்விக் என்பவருக்கும், பெங்களூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தில் வெள்ளை நிற கவுனில்... கருணாஸின் மகள் தேவதை போல் தாய் தந்தையுடன் நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய செல்ல மகள் திருமண உறவில் இணைவதை எண்ணி, கிரேஸ் ஆனந்த கண்ணீர் விடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
தீராத முழங்கால் வலி... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் நடிகர் அருண் விஜய்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!