- Home
- Cinema
- கார்த்தியின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ள விருமன் படக்குழு - வெளியான மாஸ் அப்டேட்
கார்த்தியின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ள விருமன் படக்குழு - வெளியான மாஸ் அப்டேட்
Viruman : விருமன் படத்திற்காக யுவன் இசையில் சித் ஸ்ரீராம் பாடி உள்ள கஞ்சா பூவு கண்ணால பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் விருமன். இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், இந்திரஜா ரோபோ சங்கர், சிங்கம் புலி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றி உள்ளார்.
viruman
கிராமத்து கதையம்சத்துடன் தயாராகி உள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இதுதவிர இப்படத்தில் இடம்பெறும் கஞ்சா பூவு கண்ணால என்கிற பாடலின் புரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில், யுவன் இசையில் சித் ஸ்ரீராம் பாடி உள்ள கஞ்சா பூவு கண்ணால பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 25-ந் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்தநாளன்று மதியம் 12 மணிக்கு இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... திருமணம் முடிந்த கையோடு ஏழை மக்களுக்கு உதவிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்