- Home
- Cinema
- விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து விலகிய கார்த்தி... சர்ப்ரைஸாக முன்கூட்டியே ரிலீசாகும் விருமன்?
விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து விலகிய கார்த்தி... சர்ப்ரைஸாக முன்கூட்டியே ரிலீசாகும் விருமன்?
முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி நடிப்பில் உருவாகி உள்ள விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

2022-ம் ஆண்டின் முதல் பாதி முடிந்துவிட்டது. இதில் கார்த்தி நடித்த படங்கள் ஒன்றுகூட ரிலீசாகவில்லை. ஆனால் 2022-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கார்த்தி தான் ஆதிக்கம் செலுத்த உள்ளார். ஏனெனில் அவர் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாக உள்ளன. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டன.
முதலில் ஆகஸ்ட் மாதத்தில் கார்த்தியின் விருமன் படமும், அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வனும், அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு அவரின் சர்தார் படமும் ரிலீசாகும் என கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த பட்டியலில் முதலில் இடம்பெற்றுள்ள விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரேகா நாயரின் ஆபாச பேச்சால் அப்செட் ஆன பார்த்திபன்.... பீச் மோதலுக்காக பயில்வானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
விருமன் படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். விக்ரம் நடித்த கோப்ரா படம் ஆகஸ்ட் 11-ந் தேதி ரிலீசாகாது என உறுதியானதால், விருமன் படத்தை ஆக்ஸ்ட் 31-க்கு முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிட உள்ளார்களாம்.
இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருமன் படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் அர்ஜுனின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.