- Home
- Cinema
- ரேகா நாயரின் ஆபாச பேச்சால் அப்செட் ஆன பார்த்திபன்.... பீச் மோதலுக்காக பயில்வானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
ரேகா நாயரின் ஆபாச பேச்சால் அப்செட் ஆன பார்த்திபன்.... பீச் மோதலுக்காக பயில்வானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
பீச்சில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த பயில்வானிடம், நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன, நான் என்ன உன் பொண்டாட்டியா என கேட்டு நடிகை ரேகா நாயர் தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் பார்த்திபன் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டுள்ள படம் தான் இரவின் நிழல். இப்படத்தை அவர் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். இப்படத்திற்காக பல மாதங்கள் கடினமாக உழைத்து வெற்றிகரமாக ஒரே ஷாட்டில் படமாக்கி அதனை திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியிட்டார்.
வெளியானது முதல் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், ரிலீசுக்கு பின் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக இப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் அரை நிர்வாணமாக நடித்துள்ள நடிகை ரேகா நாயர் பற்றி தான் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவர் இரவின் நிழல் படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்த பயில்வான் ரங்கநாதனிடம் சண்டையிட்டது தான்.
இதையும் படியுங்கள்... நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன.. பீச்சில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வானை பொளந்துகட்டிய இரவின் நிழல் பட நடிகை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திருவான்மியூர் பீச்சில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த பயில்வானிடம், நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன, நான் என்ன உன் பொண்டாட்டியா என கேட்டு நடிகை ரேகா நாயர் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அவரை எகிறி அடிக்கவும் சென்றார் ரேகா நாயர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் பார்த்திபனிடன் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் ரேகா நாயர் நடந்துகொண்ட விதம் தவறு என கூறியதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் பிரிகிடாவும், ரேகா நாயரும் சேர்ந்து தன்னுடைய இரவின் நிழல் படத்தை ஆபாச படம், நிர்வாண படம் என பேசி வருவது தனக்கு மன உளைச்சலை தருவதாக பார்த்திபன் தன்னிடம் ஆதங்கப்பட்டதாகவும் பயில்வான் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... அரை நிர்வாணமா நடிச்சதுக்கே திட்றாங்க.. இனி நிர்வாணமா நடிக்கவும் தயாரா இருக்கேன் - இரவின் நிழல் பட நடிகை தடாலடி