- Home
- Cinema
- Karagattakaran: மெகா ஹிட் ஜோடி கனகா – ராமராஜன் சந்திப்பு..! கரகாட்டக்காரன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ்.!
Karagattakaran: மெகா ஹிட் ஜோடி கனகா – ராமராஜன் சந்திப்பு..! கரகாட்டக்காரன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ்.!
பல வருடங்களுக்குப் பிறகு, 'கரகாட்டக்காரன்' படத்தின் வெற்றி ஜோடியான ராமராஜனும் கனகாவும் மீண்டும் சந்தித்துள்ளனர். இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனம் கவர்ந்த சினிமா ஜோடிகள்.!
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் மெகா ஹிட் படம் கரகாட்டக்காரன். அந்தப் படத்தின் நாயகன் ராமராஜனும், நாயகி கனகாவும் மீண்டும் சந்தித்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்த இந்த ஜோடியை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் மூழ்கி வருகின்றனர்.
கிராம மக்களை கவர்ந்த ஹீரோயின்
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆரம்பத்தில் நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும், அந்தப் படம் பெற்ற மெகா வெற்றி அவரை ஒரே படத்தில் நட்சத்திரமாக மாற்றியது. கிராமத்து மண்வாசனையோடு அமைந்த கதையும், ராமராஜனின் இயல்பான நடிப்பும், கனகாவின் அப்பாவித்தனமான முகபாவனையும் ரசிகர்களை கவர்ந்தது.
திரைத்துறையில் இருந்து விலகிய கனகா.!
கரகாட்டக்காரன் வெளியான பிறகு கனகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக நடித்தார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த கனகா, இன்னும் பல வருடங்கள் டாப் ஹீரோயினாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
நேரில் சந்தித்துக்கொண்ட ராமராஜன் - கனகா.!
இதனிடையே சமீப காலமாக கனகாவை சந்தித்த நடிகை குட்டி பத்மினியுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்போது ராமராஜனுடன் எடுத்துக்கொண்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களுக்கு உண்மையான ஷாக் சர்ப்ரைஸாக மாறியுள்ளது.
"இது நிஜ ரீ-யூனியன் ஷோ”
கரகாட்டக்காரன் படத்தில் கிராமத்து காதல் ஜோடியாக கலக்கிய கனகா – ராமராஜன் கூட்டணி, மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பதை பார்த்து, “எங்கள் இளமை கால நினைவுகள் திரும்ப வந்துவிட்டது”, “இது நிஜ ரீ-யூனியன் ஷோ” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணம்.!
இந்த சந்திப்பு மீண்டும் ஏதாவது புதிய படம் அல்லது சிறப்பு நிகழ்ச்சிக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. எதுவாக இருந்தாலும், கரகாட்டக்காரன் ஜோடியின் இந்த ரீ-யூனியன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

