சூப்பர்ஸ்டாரை மெர்சலாக்கிய காந்தாரா... ரஜினியின் காலில் விழுந்து நன்றி சொன்ன இயக்குனர் ரிஷப் ஷெட்டி
காந்தாரா படம் பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ள இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அவரிடம் நன்றி தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்து ஆசிபெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களைப் போல் சமீப காலமாக கன்னட மொழி படங்களும் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தை இந்திய சினிமாவே கொண்டாடிய நிலையில், தற்போது மற்றுமொரு கன்னட படமான காந்தாராவை கொண்டாடத் தொடங்கி உள்ளனர். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் தான் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் ரிலீசானது. கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இதையடுத்து பான் இந்தியா அளவில் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக.. டுவிட்டரில் சைலண்டாக விஜய் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்
இப்படத்தை பார்த்து வியந்துபோன நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில், இப்படத்தின் இயக்குனரையும், இப்படத்தில் பணியாற்றிய குழுவினரையும் பாராட்டித் தள்ளினார். காந்தாரா இந்திய சினிமாவின் தலைசிறந்த படம் என்றெல்லாம் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். சூப்பர்ஸ்டாரின் இந்த வாழ்த்து படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
இந்நிலையில், காந்தாரா படம் பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ள இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அவரிடம் நன்றி தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்து ஆசிபெற்றுள்ளார். இதுகுறித்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, ரஜினிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்