தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக.. டுவிட்டரில் சைலண்டாக விஜய் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்
டுவிட்டரில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், நடிகர் விஜய், தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட மட்டும் அதனை பயன்படுத்தி வருகிறார்.
நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படத்துக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் மூணாறில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறதாம். அதுமட்டுமின்றி இதில் விஜய்யுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்...திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எந்த ஒரு மேடையில் பேசினாலும், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று தான் கூறுவார். அந்த அளவுக்கு தன்னை கொண்டாடும் ரசிகர்களை தன் மனதில் வைத்திருக்கும் விஜய் தற்போது அவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
நடிகர் விஜய் டுவிட்டரில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், அவர் தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட மட்டும் அதனை பயன்படுத்தி வருகிறார். டுவிட்டரில் 40 லட்சம் பாலோவர்களை கொண்டுள்ள விஜய், தனது ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் டிபி-யாக வைத்துள்ளார். அந்த ஓவியம் இலங்கையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வரைந்த ஓவியம் ஆகும். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... லைகாவுடன் 2 படம் பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார்...எப்ப பூஜை தெரியுமா?