- Home
- Cinema
- தொட்டதெல்லாம் ஹிட்... இரண்டே மாதத்தில் ரூ.900 கோடி வசூல் அள்ளிய இந்த ‘லக்கி’ ஹீரோயின் யார்?
தொட்டதெல்லாம் ஹிட்... இரண்டே மாதத்தில் ரூ.900 கோடி வசூல் அள்ளிய இந்த ‘லக்கி’ ஹீரோயின் யார்?
இரண்டே மாதத்தில் தொடர்ச்சியாக 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய லக்கி ஹீரோயின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Lucky Heroine
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி ஹீரோக்களுக்கு தான் பெரிதும் உதவியாக இருக்கும். ஒரு படம் ஹிட் ஆனாலும் சரி, பிளாப் ஆனாலும் சரி அதன் ரிசல்ட் ஹீரோக்கள் மீது தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதே வேளையில், ஹீரோயின்கள் எவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தாலும் அவர்கள் திரையுலகில் அதிகம் கொண்டாடப்படுவது இல்லை. அப்படி தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து வரும் ஒரு சென்சேஷனல் ஹீரோயின் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
யார் அந்த லக்கி ஹீரோயின்?
இந்த நடிகை கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் ஒரு மொழியில் அல்ல இரண்டு மொழிகளில், அதில் ஒரு படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அப்படத்தில் ஹீரோயினாக முதல் பாதியில் ஜொலித்த அவர், இரண்டாம் பாதியில் மிரட்டல் வில்லியாக மாறி, ரசிகர்களை மிரள வைத்தார். அடுத்த நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படும் அளவுக்கு இந்த இரண்டு படங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி இருக்கிறார் அந்த நாயகி.
ருக்மிணி வசந்த் நடித்த படங்கள்
அந்த நடிகை வேறுயாருமில்லை, நடிகை ருக்மிணி வசந்த் தான். இவர் இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். ஏஸ் படம் கைகொடுக்காவிட்டாலும், இதையடுத்து செப்டம்பர் மாதம் வெளியான ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை ருசித்தார். இப்படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் - ருக்மிணி வசந்த் இடையேயான கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
காந்தாரா நாயகி
மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் கனகவதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ருக்மிணி. இப்படம் அக்டோபர் 2ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் ருக்மிணி நடித்த கேரக்டர், பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியின் கேரக்டரை ஒத்து இருக்கும். ஆரம்பத்தில் ஹீரோவை உருகி உருகி காதலித்து இறுதியில் அவனையே பழிவாங்க துடிக்கும் ஒரு வில்லியாக நடித்திருந்தார் ருக்மிணி.
900 கோடி வசூல் அள்ளிய ருக்மிணி வசந்த் படங்கள்
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 20 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடி வசூலித்துள்ளது. நடிகை ருக்மிணியின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும். இப்படி தொடர்ச்சியாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.900 கோடி வசூல் அள்ளிய ருக்மிணி வசந்துக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் தனக்கு பிடித்த கதையை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.