கண்ணை நம்பாதே முதல் வாத்தி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற மார்ச் 17-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
கண்ணை நம்பாதே
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் மு.மாறன் இயக்கி உள்ளார்.
கோஸ்டி
காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கோஸ்டி. இப்படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் போலீஸாக நடித்துள்ளார்.
கப்ஜா
கே.ஜி.எஃப், காந்தாரா பாணியில் கன்னட திரையுலகில் இருந்து அடுத்ததாக உருவாகி உள்ள பான் இந்தியா படம் தான் கப்ஜா. இதில் உபேந்திரா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள இப்படமும் வருகிற மார்ச் 17-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. கிச்சா சுதீப்பும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.
இதையும் படியுங்கள்... தன்னைவிட குறைந்த வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்... ஓப்பனாக ஒத்துக்கொண்ட ராஷ்மிகா - அப்போ விஜய் நிலைமை?
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
வாத்தி
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பட சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை செய்த வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பிரபல இயக்குனர்?