ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை செய்த வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பிரபல இயக்குனர்?
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் சந்திரமுகி 2 படத்தின் இயக்குனர் பி.வாசுவுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த சில ஆண்டுகளாக எந்தபடத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அவர் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதன்படி கடந்தாண்டு இவர் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.
இதையடுத்து மாமன்னன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் வடிவேலு. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதுதவிர சந்திரமுகி 2 படத்தையும் கைவசம் வைத்துள்ளார் வடிவேலு. பி.வாசு இயக்கி வரும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.
ஏற்கனவே வடிவேலு சந்திரமுகி 2 படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்வது இல்லை என தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், வடிவேலு, ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு வந்ததும், சீக்கிரம் போக வேண்டும் எனது காட்சிகளை முதலில் படமாக்குமாறு இயக்குனர் பி.வாசுவிடம் கேட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... உதயநிதிக்கு மீண்டும் சினிமா ஆசையை தூண்டிவிடும் மாமன்னன்... ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
ஒருமுறை கேட்டதுடன் விடாமல் தொடர்ந்து இயக்குனரை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் டென்ஷன் ஆன இயக்குனர் பி.வாசு, நீ நடிக்கவே வேணாம் கிளம்புனு கோபத்துடன் கையை காட்டி சொல்லி விரட்டினாராம். இதனைத் தொடர்ந்து செல்லும் இடமெல்லாம் பி.வாசு தன்னை இப்படி அவமானப்படுத்திவிட்டதாக புலம்பித் தள்ளுகிறாராம் வடிவேலு. இந்த விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். இதில் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சுபிக்ஷா என ஹீரோயின் பட்டாளமே நடித்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆர்.ஆர்.ஆர் முதல் தி வேல் வரை... ஆஸ்கர் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ