- Home
- Cinema
- கவிஞர் கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுதிய பாடலுக்கு கிடைத்த தேசிய விருது..! அடடே இந்த பாட்டு தானா?
கவிஞர் கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுதிய பாடலுக்கு கிடைத்த தேசிய விருது..! அடடே இந்த பாட்டு தானா?
கவிஞர் கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுதிய பாடல் ஒன்றிற்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. அது என்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Lyricist Kannadasan Song Secret
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. கண்ணதாசன் அதிக ஹிட் பாடல்களை எழுதிய இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தால், அப்பாடல் கன்பார்ம் ஹிட் என சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமான வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளனர். அப்படி இவர் கூட்டணியில் உருவாகி தேசிய விருது வென்ற ஒரு பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்தப் பாடலை அரை தூக்கத்தில் எழுதினாராம் கண்ணதாசன்.
கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுதிய பாடல் எது?
அப்படி கண்ணதாசன் அரை தூக்கத்தில் எழுதிய பாடல் வேறெதுவுமில்லை. நடிகர் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ என்கிற பாடல் தான். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். இப்படத்தை கே பாலச்சந்தர் தான் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. அது என்னது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அபூர்வ ராகங்கள் பட பாடல் உருவான விதம்
ஒரு நாள் பாடல் ஒத்திகை பார்க்கலாமா என எம்.எஸ்.வி-யிடம் கேட்டிருக்கிறார் பாலச்சந்தர். நாளைக்கு வச்சுக்கலாமா என எம்.எஸ்.வி கேட்க, இன்னைக்கு ஏன் வச்சிக்க கூடாது என பாலச்சந்தர் துருவி துருவி கேட்டதும் கண்ணதாசனிடம் இருந்து பாடல் வரிகள் வராத விஷயத்தை சொல்லிவிடுகிறார் எம்.எஸ்.வி. பெரிய கவிஞராக இருந்தாலும் அவரின் பாடல் வரிகளுக்காக எத்தனை நாட்கள் காத்திருப்பது என கத்தி இருக்கிறார் பாலச்சந்தர். இந்த சம்பவம் நடந்த போது அங்குள்ள மாடியில் தான் உறங்கிக் கொண்டிருந்தாராம் கண்ணதாசன். இந்த தகவலை கமல், பாலச்சந்தரிடம் சொன்னதும் அவர் மேலும் டென்ஷன் ஆகி இருக்கிறார்.
தூக்க கலக்கத்தில் கண்ணதாசன் எழுதிய பாட்டு
அப்போ நானும் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு தூங்கட்டுமா என கேட்டுவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பி இருக்கிறார் பாலச்சந்தர். இவர் சத்தம் போட்டதில் கண்ணதாசனுக்கு தூக்கம் கேட்டுவிட்டது. இதனால் அரை தூக்கத்தில் எழுந்த அவர் விறுவிறுவென பாடல்களை எழுதிவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இதுதெரியாத எம்.எஸ்.வி தன்னுடைய உதவிiயாளரை அனுப்பி அவர் எழுந்துவிட்டாரா என பார்த்துவர சொல்லி இருக்கிறார். அங்கு சென்ற உதவியாளர், கையில் பேப்பருடன் திரும்பி வந்திருக்கிறார். அங்கு கண்ணதாசன் இல்லை என்றும் இந்த பேப்பர் மட்டும் இருந்ததாக எம்.எஸ்.வியிடம் கொடுத்திருக்கிறார்.
தேசிய விருது வென்ற பாடல்
பின்னர் பாலச்சந்தரிடம் அந்த பாடல் வரிகளை அடங்கிய பேப்பரை கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். அவர் என்னத்த எழுதி இருக்கப் போகிறார் என வேண்டா வெறுப்பாக வாசிக்க தொடங்கிய பாலச்சந்தருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்ததாம். ஏனெனில் கண்ணதாசன் ஏழு வகையான பாடல் வரிகளை எழுதி வைத்திருக்கிறார். இதில் எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி போனாராம் பாலச்சந்தர். அதில் ஒன்றை தேர்வு செய்து தான் ஏழு ஸ்வரங்களுக்குள் என்கிற பாடலை உருவாக்கி இருக்கிறார். அப்பாடல் ஹிட்டானதோடு, அப்பாடலை பாடியதற்காக பாடகி வாணி ஜெயராமுக்கு தேசிய விருதும் கிடைத்தது.