எஸ்கேப் ஆன அஜித்; சிறுத்தை சிவாவின் அடுத்த பட ஹீரோ அதிரடியாக மாற்றம்?
கங்குவா படத்தின் படுதோல்விக்கு பின்னர் அஜித் படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா
ஒளிப்பதிவாளராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி வந்த சிவா, கார்த்தி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் கதையில் சில மாற்றங்களை செய்து மாஸ் ஹிட் அடிக்க வைத்தார் சிவா. இதனால் அவரின் முதல் பட பெயரைவைத்தே அவரை சிறுத்தை சிவா என அழைக்க தொடங்கினர். சிறுத்தை பட வெற்றிக்கு பின் சிவாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித் படம்.
அஜித்துடன் 4 படங்கள்
அந்த வகையில் அஜித்தை வைத்து வீரம் திரைப்படத்தை இயக்கினார் சிவா. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, அப்படத்தின் போது அஜித்துடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரை வைத்து வரிசையாக நான்கு படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அஜித்தின் கெரியரில் அவர் அதிக படங்களில் பணியாற்றிய இயக்குனர் சிறுத்தை சிவா தான். அஜித்தை வைத்து அவர் இயக்கிய நான்கு படங்களில் வீரம் மற்றும் விஸ்வாசம் தான் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் டிசாஸ்டர்; ஓடிடியில் பிளாக்பஸ்டர்! கங்குவா புது சாதனை
கங்குவா படுதோல்வி
விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை இயக்கினார் சிவா. அப்படம் தோல்வியை சந்தித்தது. அதன்பின் நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைத்த சிவா, அவரை வைத்து கங்குவா என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கினார். இப்படம் பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் உடன் ரிலீஸ் ஆனாலும், சொதப்பலான திரைக்கதை காரணமாக கங்குவா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. அப்படத்தின் தோல்வியால் இயக்குனர் சிவா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாரம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி?
கங்குவாவுக்கு பின் அவர் இயக்க இருந்த அஜித் படமும் தற்போது வேறு இயக்குனருக்கு சென்றுவிட்டது. இதனால் கோவில் கோவிலாக சுற்றி வரும் சிவா, ஒருமுறை கோவிலுக்கு சென்றபோது அங்கு விஜய் சேதுபதியை சந்தித்தாராம். அப்போது இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டார்களாம். அநேகமாக இருவரும் இணைந்து ஒருபடத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதித்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் இது சிறுத்தை சிவாவின் கம்பேக் படமாக அமைய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யாவின் வளர்ச்சி பிடிக்கல; திட்டமிட்டு தோற்கடிச்சிட்டாங்க - தயாரிப்பாளர் தனஞ்செயன்!