MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2 கோடிக்கு கூட ஒர்த் இல்ல... ஆனா 200 கோடி சம்பளம் வாங்குறாங்க - சூப்பர்ஸ்டார் நடிகரை வெளுத்து வாங்கிய கங்கனா

2 கோடிக்கு கூட ஒர்த் இல்ல... ஆனா 200 கோடி சம்பளம் வாங்குறாங்க - சூப்பர்ஸ்டார் நடிகரை வெளுத்து வாங்கிய கங்கனா

அமீர்கானின் லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை நடிகை கங்கனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 01 2022, 07:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா. டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்த கங்கனா, அரசியல் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிடுவார். அவ்வாறு செய்ததன் காரணமாக இவரின் டுவிட்டர் கணக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் முடக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் கங்கனா.

24

இன்ஸ்டாகிராமில் அவருக்கு கணக்கு இருந்தாலும், அதனை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் முடக்கப்பட்ட முக்கிய பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கும் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள கங்கனா, தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்தால் உங்களுக்கு நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... புனீத் ராஜ்குமார் கடவுளின் குழந்தை... கொட்டும் மழையிலும் விசில் பறக்க பேசிய ரஜினி - வைரல் வீடியோ இதோ

34

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கானை வெளுத்து வாங்கி உள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள கங்கனா, அமீர்கானின் இந்தியாவுக்கு எதிரான பேச்சு தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். 

44

2 கோடிக்கு கூட ஒர்த் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திவிட்டு 200 கோடி சம்பளம் வாங்குவது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ள அவர், படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது அநியாயம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்ன பிரபலம்... ‘வாய்ப்பில்ல ராஜா’னு சொல்லி கெத்து காட்டிய அஞ்சலி நாயர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆமிர் கான்
கங்கனா ரனாவத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved