புனீத் ராஜ்குமார் கடவுளின் குழந்தை... கொட்டும் மழையிலும் விசில் பறக்க பேசிய ரஜினி - வைரல் வீடியோ இதோ

பெங்களூருவில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கான கர்நாடக ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினியிடம் வழங்கினார்.

Rajinikanth Speech about Puneeth rajkumar at karnataka Rajyostava

கன்னட ராஜ்யோத்சவா தினமான இன்று மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. புனீத் சார்பாக அவரது மனைவி அஸ்வினி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கன்னடத்தில் பேசியது அங்கு வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் நடிகர் ரஜினி பேசத் தொடங்கியதும் மழை பெய்யத் தொடங்கியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புனீத் ராஜ்குமார் பற்றி அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். 

இதையும் படியுங்கள்...  அரசு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் கெத்தாக வந்த ரஜினி... ஓடோடி வந்து வரவேற்ற அமைச்சர் - வைரல் வீடியோ

அந்த விழாவில் ரஜினி பேசியதாவது : “ அனைவருக்கும் கன்னட ராஜ்யோத்சவா வாழ்த்துக்கள். புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அது அவர் நடிகர் என்பதால் வந்த கூட்டம் அல்ல அவரின் மனிதாபிமானம் மற்றும் ஆளுமைக்காக வந்த கூட்டம். புனிதத்தின் ஆளுமை சிறப்பானது. அவர் கடவுளின் குழந்தை. 

புனீத் ராஜ்குமாரின் முதல் படமான அப்பு படத்தை ரிலீஸுக்கு முன்பே பார்த்தேன். படம் 100 நாட்கள் ஓடும் என்று ராஜ்குமாரிடம் சொன்னேன். நான் சொன்னபடியே அந்த படம் வெற்றி விழா கண்டது என்பதையும் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார். மேலும் புனீத் மரணமடைந்த போது தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அப்போது யாருமே அந்த தகவலை தன்னிடம் சொல்லவில்லை என்றும், மூன்று நாட்களுக்கு பின்னர் தான் புனீத் இறப்பு செய்தி தனக்கு தெரியவந்ததாகவும் ரஜினி உருக்கமாக பேசினார்.

அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும், மன நிம்மதி உடனும் இருக்க வேண்டும் என அல்லா, ஜீசஸ், ராஜ ராஜேஸ்வரியை வேண்டிக்கொள்கிறேன் என ரஜினி ஒற்றுமையை வலியுறுத்தி பேசியபோது விசில் பறந்தது.


 
இதையும் படியுங்கள்... சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்ன பிரபலம்... ‘வாய்ப்பில்ல ராஜா’னு சொல்லி கெத்து காட்டிய அஞ்சலி நாயர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios