MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தேவர்மகனை விமர்சித்தவருடன் மாமன்னன் படம் பார்த்து கமல் சொன்ன விமர்சனம்! கேட்டதும் நடுங்கிப்போன மாரி செல்வராஜ்

தேவர்மகனை விமர்சித்தவருடன் மாமன்னன் படம் பார்த்து கமல் சொன்ன விமர்சனம்! கேட்டதும் நடுங்கிப்போன மாரி செல்வராஜ்

தேவர்மகன் படத்தை விமசித்து மாரி செல்வராஜ் பேசிய நிலையில், மாமன்னன் படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அப்படம் குறித்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 23 2023, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mari selvaraj, Kamalhaasan

Mari selvaraj, Kamalhaasan

தமிழ் சினிமாவில் வியத்தகு பல சாதனைகளை படைத்தவர் தான் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்திய பெருமையும் கமலையே சாரும். அந்த அளவுக்கு சினிமாவிற்காக அயராது உழைக்கும் கமல்ஹாசனை ஒருவர் விமர்சித்தால் சும்மா விடுவார்களா. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் நடந்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் படத்தை மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் விமர்சித்து இருந்தார்.

26
maamannan

maamannan

கமலை அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு விருந்தினராக அழைத்து அவரை முன் வரிசையில் அமர வைத்துக்கொண்டே அவரின் மாஸ்டர் பீஸ் படமான தேவர்மகனை மாரி செல்வராஜ் விமர்சித்தது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் மாரி செல்வராஜ் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கமலை கடுமையாக தாக்கி மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தை வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.

36
maamannan

maamannan

மாரி செல்வராஜ் தேவர்மகன் படத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் அப்படத்தை விமர்சித்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் அவரை சாடினர். மாமன்னன் ஆடியோ லாஞ்சில் தான் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ள மாரி செல்வராஜ், கமல்ஹாசன், மாமன்னன் படம் பார்த்து என்ன விமர்சனம் சொன்னார் என்பதையும் அதில் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்... ‘ரெஜினா’வாக சுனைனா சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ

46
maamannan

maamannan

அதில் அவர் கூறியதாவது : “மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரொம்ப எமோஷனலான தருணம். அவரிடம் நெருக்கமாக பேசியதால் தான் அந்த எமோஷன் வெளிவந்தது. அது கமல் சாருக்கும் தெரியும். 13 வருஷத்துக்கு முன்னர் அப்படி கடிதம் எழுதியது, அந்த சமயத்தில் எனக்கு இருந்த கோபத்தையும், மொழி வாசிப்பையும் வைத்து எழுதப்பட்டது. அதன்பின் மிகப்பெரிய உழைப்பை போட்டு தான் நான் சினிமாவை கற்றிருக்கிறேன்.

56
maamannan

maamannan

கமல் சார் பரியேறும் பெருமாள் பார்த்துட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார். அவர் மாமன்னனும் பார்த்துவிட்டார். அவருடன் அமர்ந்து தான் நானும் படத்தை பார்த்தேன். பார்த்து முடித்ததும் என் கையை பிடித்து அவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது என் உடம்பெல்லாம் நடுங்கியது. அது அவருக்கும் தெரியும், மாமன்னன் படத்தை உணரக்கூடியவர் தான அவர். நான் அந்த விழாவில் பேசிய பின்னர் கமல் சார் பேசுகையில், இது மாரியின் அரசியல் இல்லை, நம் அரசியல் என சொன்னபோது எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்.

66
Mari selvaraj

Mari selvaraj

மேடையில் பேசும் போது நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அந்த வீடியோ பார்த்தாலே தெரியும், நான் எதோ பேச ஆரம்பித்து எதையோ பேசி இருப்பேன். என் எதிரே அமர்ந்திருந்த கமல் சாரை பார்த்து பேசினேன். பேசி முடித்து கீழே வந்ததும் எதுவும் தப்பா பேசிட்டேனா என உதயநிதியிடம் கேட்டேன். அவர் சரியா தான் பேசுனீங்கனு சொன்னாரு. வீட்டை விட்டு ஓடிப்போன மகன் திரும்பி வந்து அப்பாவிடம் கோபமாக பேசியது போன்றது தான் அது” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...  ஒரே நாளில் ரிலீசாகும் கமல்ஹாசனின் 2 பிரம்மாண்ட படங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
குரு - சீடர் உறவையும் தாண்டி தந்தை - மகன் பாசம்! பாக்யராஜ் - பாண்டியராஜன் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பு!
Recommended image2
விஜய் பட திருட்டு சிடியை கவின் ஏன் உடைத்தார்? ரியோ பகிர்ந்த பழைய நினைவுகள்!
Recommended image3
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved