டொமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரெஜினா. இப்படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ள சதீஷ் நாயர் தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சுனைனா உடன் ஆனந்த் நாக், சாய் தீனா, ரித்து மந்திரா, அப்பானி சரத், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பவி கே பவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுனைனா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. ரிவெஞ்ச் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின்

ரெஜினா படம் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக உள்ளது. இப்படத்தை எடுக்க நிறைய ரிஸ்க் எடுத்துள்ளது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் உயர்த்திக் காட்டும் சதீஷ் நாயரின் அருமையான பின்னணி இசைக்கு கைதட்டல்களை கொடுக்கலாம் என பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…

ரெஜினா, நேர்த்தியான மற்றும் எளிமையான ரிவெஞ்ச் ஸ்டோரி கொண்ட படமாக இருந்தாலும், அழுத்தமான திரைக்கதையுடன் விவரிக்கப்பட்டுள்ள விதம் அருமை. சுனைனாவின் நடிப்பில் வேறலெவல், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தெறிக்கிறது. இயக்குனர் டொமின் டி சில்வாவுக்கு இது ஒரு நல்ல முயற்சி. வொர்த் ஆன படமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ரெஜினா ஒரு ரிவெஞ்ச் திரில்லர் படமாக உள்ளது. இதில் சுனைனா தன் எதிரிகளை அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி எதிர்கொள்கிறார். இப்படத்தின் ஹைலைட்டே சதீஷ் நாயரின் இசை தான் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ரெஜினா பட இயக்குனர் டொமின் டி சில்வா சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கூடிய ஒரு நல்ல திரில்லர் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை சுனைனா தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார். இதில் அவரது நடிப்பு வேற லெவலில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... ஒரே நாளில் ரிலீசாகும் கமல்ஹாசனின் 2 பிரம்மாண்ட படங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!