Vikram All Time Record : ‘பாகுபலி 2’ சாதனையை அடிச்சு தூக்கி பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘விக்ரம்’
Vikram All Time Record : தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்த ராஜமவுலியின் பாகுபலி 2 படத்தின் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த விக்ரம் திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த ஜூன் 3-ந் தேதி ரிலீசானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, செம்பன் வினோத், ஜாஃபர், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, காயத்ரி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், இசைக்கு அனிருத், ஸ்டண்ட்டுக்கு அன்பறிவு, எடிட்டிங்கிற்கு பிலோமின் ராஜ் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இதில் பணியாற்றி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.
வெளியானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான நாடுகளில் அதிக கலெக்ஷன் செய்த திரைப்படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. அண்மையில் இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய உதயநிதி இப்படம் ஆல் டைம் ரெக்கார்டு சாதனையை படைக்கும் என கூறி இருந்தார்.
அவர் சொன்னபடியே தற்போது தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்த ராஜமவுலியின் பாகுபலி 2 படத்தின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. பாகுபலி 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.155 கோடி வசூலித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், விக்ரம் படம் தற்போது ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்.... ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த விக்கி - நயன் ஜோடி... தீயாய் பரவும் போட்டோஸ்