MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த விக்கி - நயன் ஜோடி... தீயாய் பரவும் போட்டோஸ்

ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த விக்கி - நயன் ஜோடி... தீயாய் பரவும் போட்டோஸ்

Nayanthara Honeymoon : நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 19 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி கரம்பிடித்தார். மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான பீச் ரெசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கு சாமி தரிசனம் செய்ததோடு, ஜோடியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்காக மன்னிப்பு கேட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டார்.

34

இதன்பின்னர் ஜோடியாக கேரளாவுக்கு கிளம்பிய விக்கி - நயன் ஜோடி, அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தனர். நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து ஷூட்டிங் இருப்பதால் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லும் பிளானை தள்ளிவைத்துள்ளதாக கூறப்பட்டது.

44

திருமணம் முடிந்ததும் முதலில் அவர் ஜவான் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் இயக்குனர் அட்லீ, நயன்தாராவின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் பெர்மிஷன் வாங்கிவிட்டு ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளார் நயன்தாரா. தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Samantha : காத்துவாக்குல கவர்ச்சியை அள்ளித்தெளித்த சமந்தா... வைரலாகும் கிக்கான கிளாமர் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
தாய்லாந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : கருப்பனிடம் சரண்டர் ஆன ஜார்ஜ்குட்டி... திரிஷ்யம் 3-ஐ விட அதிக வசூலை வாரிசுருட்டிய கருப்பு
Recommended image2
Trisha : விஜய், அஜித், சூர்யா... 3 பேருக்கும் திரிஷா தான் லக்கி சார்ம்! அடடே இப்படி ஒரு ஒற்றுமையா?
Recommended image3
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved