இதுதான் கடைசி படம்; இனி என் ரூட்டே வேற... கஜானாவை நிரப்ப கமல் போட்ட மாஸ்டர் பிளான்!
சினிமா, அரசியல் என இரண்டிலும் பிசியாக உள்ள கமல்ஹாசன், மாநிலங்களவை எம்பி ஆகும் முன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Kamalhaasan Important Decision
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனால். எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் கமல்ஹாசன். இதனிடையே அவர் மாநிலங்களவை எம்பியாகவும் தேர்வாகி இருப்பதால், தன்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார். கமல்ஹாசன் கைவசம் அன்பறிவு இயக்கும் படம், எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம், இந்தியன் 3, கல்கி 2, விக்ரம் 2 போன்ற திரைப்படங்கள் உள்ளன.
கமல்ஹாசனின் அடுத்த படம் என்ன?
மேற்கண்ட படங்களில் இந்தியன் 3 தான் கமல்ஹாசனின் அடுத்த படமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்தியன் 2 தோல்விக்கு பின் இப்படத்தை கிடப்பில் போட்டிருந்த படக்குழு, அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் அப்படத்தை மீண்டும் தூசிதட்டி எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சக்சஸ்புல் ஆக முடிய முக்கிய காரணம் ரஜினி தான் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சம்பளம் கொடுத்தால் தன் எஞ்சியுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்வோம் என விடாப்பிடியாக இருந்த கமலும், ஷங்கரும் தற்போது சம்பளமே இல்லாமல் இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்களாம்.
கமல் எடுத்த அதிரடி முடிவு
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக நடித்த படங்களில் பெரும்பாலானவற்றை அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமே தயாரித்திருந்தார். இதில் இந்தியன் 2 படத்தை மட்டும் லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. அப்படம் எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு சிக்கல்கள் வந்தன. இதனைக் கருத்தில் கொண்டு இனி வெளி தயாரிப்புகளில் நடிக்கக் கூடாது என்கிற அதிரடி முடிவை கமல்ஹாசன் எடுத்துள்ளாராம். தற்போது கைவசம் உள்ள இந்தியன் 3 மற்றும் கல்கி 2 ஆகியவை தான் அவர் வெளி தயாரிப்பில் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நிரம்பப் போகும் கமலின் கஜானா
நடிகர் கமல்ஹாசனின் இந்த மூவ் ஒரு மாஸ்டர் பிளான் ஆக தான் பார்க்கப்படுகிறது. அவர் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த தக் லைஃப் மட்டும் தான் தோல்வியை சந்தித்தது, அதற்கு முன்னர் விக்ரம் மற்றும் அமரன் ஆகிய படங்கள் மூலம் கோடி கோடியாய் லாபம் பார்த்தார் கமல். அடுத்ததாக கமலின் லைன் அப்பில் உள்ள இயக்குனர்கள் எல்லாம் வேற லெவல் ஹிட் கொடுத்தவர்கள். குறிப்பாக சித்தா மற்றும் வீர தீர சூரன் படங்களின் வெற்றிக்கு பின் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதேபோல் கோலிவுட்டில் செம டிமாண்ட் உள்ள இயக்குனரான லோகேஷ் கனகராஜும் கமலின் கம்பெனிக்காக விக்ரம் 2 படம் பண்ண இருக்கிறார். அப்படம் எல்சியூ-வின் உச்சமாக இருக்கும் என்பதால் அதுவும் கன்பார்ம் கல்லாகட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அடுத்தடுத்த படங்களில் கமலின் கஜானா நிரம்ப அதிகளவில் வாய்ப்பு உள்ளது.