MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • vikram movie : கொரோனா வார்டில் குவிந்த விக்ரம் படக்குழு... போட்ட பிளானெல்லாம் சொதப்பியதால் கடுப்பான கமல்

vikram movie : கொரோனா வார்டில் குவிந்த விக்ரம் படக்குழு... போட்ட பிளானெல்லாம் சொதப்பியதால் கடுப்பான கமல்

விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 17 2022, 06:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மாநகரம்  படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. 

26

கடந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்முலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

36

நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். 

46

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 
 

56

இந்நிலையில், தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுது செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

66

இதனால் வருகிற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. போட்ட பிளான் சொதப்பியதால் நடிகர் கமல் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதன்மூலம் விக்ரம் படம் மே அல்லது ஜூன் மாதங்களுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ்
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அந்த ஒரு சீன் தான் படத்தையே மாத்துச்சு!" - அஞ்சாதே உருவான ரகசியங்களை உடைத்த மிஷ்கின்!
Recommended image2
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image3
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved