- Home
- Cinema
- விக்ரம் படம் தந்த மவுசு....ரஜினியை ஓரம் கட்டி விட்டு மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்த கமல்...எப்படி தெரியுமா..?
விக்ரம் படம் தந்த மவுசு....ரஜினியை ஓரம் கட்டி விட்டு மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்த கமல்...எப்படி தெரியுமா..?
Kamal Salary: விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். இதையடுத்து, இவர் தமிழ் சினிமாவில், ரஜினியை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

Rajini Kamal
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல், இவர் நடிப்பில் ஜூன் 3 தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி வேற லெவல் ஹிட் கொடுத்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
Rajini Kamal
தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, வட இந்தியா உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான். அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ் கங்காதரனின் பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இப்படம் சிறந்து விளங்கியது.பல வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, இதுவரை தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது விக்ரம்.
Rajini Kamal
திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட 'விக்ரம் ' திரைப்படம் நேற்று முதல், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒருமுறை பார்த்தவர்கள் கூட விக்ரம் படத்தை பத்தலை பத்தலை எனவே, மீண்டும்.. மீண்டும் பார்க்க ஆர்வமாக பார்த்து வருகிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Rajini kamal
அப்படியான இமாலய வெற்றியடைந்துள்ள விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு இனி அவர் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் ரூ.130 கோடி அளவில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன்முலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக கமல் மாறியுள்ளார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.