இந்தியன் 2 படப்பிடிப்பில் இதுவரை கலந்து கொள்ளாத கமல்! புது அப்டேட் இதோ
சமீபத்தில் துவங்கிய இதன் படப்பிடிப்பில் செப்டம்பரில் தான் நாயகன் கமலஹாசன் கலந்து கொள்வார் என தெரிகிறது.

Indian 2
இயக்குனர் சங்கர், கமல் கூட்டணி அமைத்து உள்ள இந்தியன் 2 படத்தின் வேலைகள் மீண்டும் சமீபத்தில் துவங்கியது. வருமாறு 25ஆம் தேதி முதல் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்டோர் புதிதாக பங்கேற்க உள்ளதாக சமீபத்திய செய்தி வெளியாகியிருந்தது.
indian 2
முன்னதாக காஜல் அகர்வால் பிரசவத்திற்காக இந்தியன் 2வில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் தொடர்ந்து இந்த படப்பிடிப்பில் இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். அதோட செப்டம்பர் நடு பகுதியில் படப்பிடிப்பு சேர உள்ளதாகவும் கூறியிருந்தார் காஜல்.
மேலும் செய்திகளுக்கு...ஐஷ்வர்யா மேனனை சந்தித்த தாய் கிழவி ஷோபனா...நாயகியை வைத்து புதிய முயற்சி எடுக்கும் தயாரிப்பு நிறுவனம்
indian 2
அதோடு இவர்களுடன் சத்யராஜ் மற்றும் கார்த்திக் இதில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல ஆண்டுகளாக இந்த படம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...நீல நிற கோட் அணிந்தது கிக் போஸ் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் நாயகி
indian 2
சமீபத்தில் துவங்கிய இதன் படப்பிடிப்பில் செப்டம்பரில் தான் நாயகன் கமலஹாசன் கலந்து கொள்வார் என தெரிகிறது. முன்னதாக டெல்லிக்கு சென்று படத்திற்கான ஒப்பனை வேலைகளை கமலஹாசன் செய்து வருவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வந்தது.
indian 2
இறுதியாக கமலஹாசன் நடித்திருந்த விக்ரம் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்து 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை முந்தைய கமலஹாசனின் விக்ரம் படம் தொடர்ச்சியாக வெளியாகி இருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...நீல நிற கோட் அணிந்தது கிக் போஸ் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் நாயகி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.