நீல நிற கோட் அணிந்தது கிக் போஸ் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் நாயகி
அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது நீல நிற கோட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Aishwarya Menon
கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால் இவர் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் வளர்ந்துள்ளார். முதன் முதலில் காதலில் சொதப்புவது எப்படி எனும் படத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
Aishwarya Menon
பின்னர் தசாவாலா மூலம் கன்னடத் துறைக்கும் என்ட்ரி கொடுத்தார். இதில் ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக நடித்த இவர் நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தார். மனநலம் குன்றிய பெண்ணாக இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய கையோடு தனுஷ் பட நாயகியாக மாறிய மைனா...
Aishwarya Menon
இதை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே படத்தில் நடித்தார். தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்ட இதில் மகளாக நடித்து மனதை கவர்ந்தார். பகத் ஃபாஷீலுடன் இணைந்து மலையாள திரைப்படமான மான்சூன் மாங்கோஸ் என்னும் படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.
மேலும் செய்திகளுக்கு...9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர்
Aishwarya Menon
மலையாளத்தில் போல்டான இளம்பெண்ணாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன் மீண்டும் தமிழ் படம் 2 மூலம் தமிழுக்கு திரும்பினார். நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஸ்பை உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
Aishwarya Menon
இவரின் இறுதி வெளியீடான தமிழ் ராக்கர்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் சமீபத்தில் தான் சோனி லைவ் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு....திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?
Aishwarya Menon
இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது நீல நிற கோட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.