சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்..புது ட்வீட்டால் கிளம்பும் யூகங்கள் !
விக்ரம் படத்தில் கமலுடன் நடித்துள்ள சூர்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக அன்பு கிடைத்துள்ளது.

Vikram
விக்ரம் நேற்று வெளியாகி தமிழ் நாட்டில் மட்டும் 25 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. விரைவில் உலகம் முழுவதும் 100 கோடியை கைப்பற்றும் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் நரேன், காளிதாஸ் ஜெயராமன், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி, சிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மாஸ்டர், கைதி, மாநகரம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்த ஹிட்டாக இந்த படம் வெளியாகியுள்ளது.
vikram
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், ஸ்டண்ட்டுக்கு அன்பறிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் பணியாற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா நேற்றுஉலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
suriya in vikram
கைதி படத்துடன் ஒன்றிப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் வைப்ரேஷனை பெற்று வருகிறது. இதில் 5 நிமிடம் மட்டும் வந்தாலும் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்கள் மனதில் ஈஸியாக பதிந்துவிட்டது. ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்து சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
vikram
இந்நிலையில் சூர்யாவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நாயகன் கமல் , அன்பே vikramசூர்யா தம்பி, இந்த அன்பு நீண்ட காலமாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இப்போது அந்த மக்கள்தொகையை அதிகரித்துள்ளது.. உங்களுக்கு ஆல் தி வெரி பெஸ்ட் என் தம்பி , மன்னிக்கவும் தம்பி சார் என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை சூர்யாவை குறைவான நேரம் மட்டுமே திரையில் காட்டியது குறித்து கமல் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.