'பாண்டியன் ஸ்டோர்' புதிய முல்லை... காவியாவும் சீரியலை விட்டு விலகுகிறாரா? என்ன காரணம்...
விஜய் டிவியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் (Pandian Store Serial) இருந்து, புதிய முல்லை... காவியா அறிவுமணி (Kaavya Arivumani) விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு தனி இடம் உண்டு.
தெலுங்கில் 'வடிநம்மா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ்' எனவும் இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம்.
இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர்.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததால், இவரது கதாபாத்திரத்தில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் இவரது நடிப்பு சில விமர்சனங்களை பெற்றாலும், போக போக இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.
இந்நிலையில் திடீர் என, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து காவியா விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் கவின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ள திரைப்படம் 'ஊர் குருவி'.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.