அட இவ்வளவு தானா?..பகிர் கிளப்பிய காத்து வாக்குல ரெண்டு காதல் வசூல்!..
காத்து வாக்குல ரெண்டு காதல் தியேட்டர்களில் ரூ.66 கோடியை தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

KaathuvaakulaRenduKaadhal
ரவுடி பேபி படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அதே கூட்டணியை வைத்து தயாரித்திருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேத்பதி, நயன்தாரா, சமந்தா நடித்திருந்தனர். ' காத்து வாக்குல ரெண்டு காதல் ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
KaathuvakulaRenduKaadhal
முக்கோண காதல் நாடகம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியது. பிளாக்பஸ்டர் வெற்றியாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் குளறுபடி இருப்பதாகவும் கூறி திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
KaathuvakulaRenduKaadhal
இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் காதல் சின்னமாக உருவாகியுள்ள ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.
KaathuvakulaRenduKaadhal
இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரூ. 100 கோடியை வசூலித்ததாக சமீபத்தில் செய்திகளில் வைரலானது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 66 கோடியை வசூலித்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.