- Home
- Cinema
- ஓடிடியில் யார் டாப்பு? அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் இதோ
ஓடிடியில் யார் டாப்பு? அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் இதோ
ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.

Top 10 Most Watched OTT Series and Movies : கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. தற்போது ஓடிடிக்காகவே தனியாக படங்களும் வெப் தொடர்களும் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் படங்கள் தியேட்டரில் ஓடும்போது பார்ப்பவர்களை விட ஓடிடியில் தான் அதிகப்படியானோர் பார்க்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் ஓடிடியில் நேரடியாக வெளியான படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்டது எது என்பதன் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது.
Ek Badnaam Aashram season 3
இந்த லிஸ்ட்டில் வெப் தொடர் மற்றும் படங்கள் இடம்பிடித்துள்ளன. வெப் தொடர்களாக இருந்தால் குறைந்தது ஒரு எபிசோடாவது பார்த்திருக்க வேண்டும். அதேபோல், படமாக இருந்தால் குறைந்தது 30 நிமிஷமாவது பார்த்தவங்களின் பட்டியலை மையமாக வைத்து இந்த பட்டியல் தயாராகி உள்ளது. இந்தியா முழுவதும் எடுத்த இந்த சர்வேயில் ஹிந்தி வெப் தொடர்களும், படங்களும் தான் அதிகமாக இடம்பிடித்துள்ளன. பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை எடுத்த பட்டியல் தான் இது.
இதையும் படியுங்கள்... March 7th OTT Release: குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை மார்ச் 7ல் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!
Dabba Cartel,
இதில் ‘ஏக் பத்னாம் ஆஷ்ரம்’ சீசன் 3 என்கிற இந்தி வெப் தொடர் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அமேசான் எம்எக்ஸ் பிளேயரில் வெளியான இந்த தொடரை ஒரு வாரத்தில் சுமார் 9.6 மில்லியன் பேர் பாத்துள்ளார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் ஓட வெப் தொடரான ‘ஊப்ஸ் அப் க்யா’ ரெண்டாவது இடத்தில் உள்ளது. இதை 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3வது இடத்தில் சோனி லிவ் ஓட ரியாலிட்டி ஷோவான ‘ஷார்க் டேங்க் இந்தியா’ சீசன் 4 உள்ளது. இது 38 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
4வது இடத்துல நெட்பிளிக்ஸில் வெளிவந்த ‘தூம் தாம்’ என்கிற படம் உள்ளது. இப்படத்தை ஒரே வாரத்தில் 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 5வது இடத்தில் 31 லட்சம் வியூஸ் உடன் ஹாட்ஸ்டார் ஓட ‘பவர் ஆஃப் பஞ்ச்’ என்கிற படம் உள்ளது.
Dil Dosti aur Dogs poster
6வது இடத்தில் நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸான ‘டப்பா கார்டல்’ இருக்கிறது. ஜோதிகா நடித்த இந்த வெப் தொடரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 7வது இடத்தில் ஹாட்ஸ்டார்ல வெளிவந்த ‘கௌஷல்ஜீஸ் வெர்சஸ் கௌஷல்’ என்கிற படம் உள்ளது.
இதற்கு 25 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. 8வது இடத்தில் உள்ள அமேசான் எம்எக்ஸ் பிளேயர் ஓட வெப் சீரிஸ் ‘ஸ்கூல் பிரண்ட்ஸ் சீசன் 3’ 22 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 9வது இடத்துல ஹாட்ஸ்டார் படமான ‘தில் தோஸ்தி ஓர் டாக்ஸ்’ 21 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. ஜீ 5 வெப் தொடரான ‘க்ரைம் பீட்’ ஒரு வாரத்துல 2 மில்லியன் பார்வைகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Jyothika: பாலிவுட் போனதும் இப்படியா? படு மோசமான காட்சியில் நடித்த ஜோதிகா - எகிறும் கண்டனம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.