- Home
- Cinema
- வயிற்றில் வளரும் கருவை கலைக்க கட்டாயப்படுத்தினார் – கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த ஜாய் கிரிசில்டா
வயிற்றில் வளரும் கருவை கலைக்க கட்டாயப்படுத்தினார் – கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த ஜாய் கிரிசில்டா
Joy Crizildaa tearful Complaint against Madhampatty Rangaraj : வயிற்றில் வளரும் கருவை கலைக்க வற்புறுத்தினார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது 2ஆவது மனைவி ஜாய் கிரிசில்டா புகார்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி அவரது 2ஆவது மனைவியாக ஜாய் கிரிசில்டா போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி ஒரு சில மாதங்களில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.
மாதம்பட்டி ரங்கராஜ்
டிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார். ஏற்கனவே ரங்கராஜிற்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடந்து 2 மகன்கள் இருக்கும் நிலையில் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஜாய் கிரிசில்டா 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
முதல் மனைவியை பிரிந்த மாதம்பட்டி ரங்கராஜ்
முதல் மனைவியை பிரிந்த மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதில், அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கருவை கலைக்க மாதம்பட்டி ரங்கராஜ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கிரிசில்டா கட்டாயப்படுத்தி மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தான் இவர்களது அவசர மற்றும் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு உடன்பாடில்லை என்றும், கிரிசில்டாவின் கட்டாயத்திற்காகத்தான் அவரை திருமணமும் செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகியவற்றில் எந்த புகைப்படமும் பகிரவில்லை. அதோடு, இந்த திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார்
ஆனால், கிரிசில்டா தான் தொடர்ந்து திருமண புகைப்படங்கள், மாசமாக இருக்கும் புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் ஜாய் கிரிசில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் தந்தை
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.