- Home
- Cinema
- மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.

Joy Crizildaa Complaint against Madhampatty Rangaraj
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், சினிமாவிலும் நடித்து பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் தன்னிடம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் ஆகி இருக்கிறது. கோவிலில் வைத்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்த ஜாய் கிரிசில்டா
இரண்டு ஆண்டுகள் திருமணம் ஆனதை மறைத்து இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தங்களது திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மறுதினமே தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் இதுகுறித்து புகார் கொடுத்திருந்தார். அதன்பின்னர் இருவரையும் நேரில் அழைத்து மகளிர் ஆணையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் ஜாய் கிரிசில்டாவுக்கு குழந்தையும் பிறந்தது.
இருதரப்பு மோதல்
மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தில் அனைத்து உண்மையை ஒத்துக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாவில் பதிவிட, அதற்கு பதிலடியாக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ், தான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டதோடு, தான் டிஎன்ஏ டெஸ்டுக்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜை டிஎன்ஏ டெஸ்டுக்கு அழைத்து இன்ஸ்டாவில் பல்வேறு பதிவுகள் போட்ட ஜாய் கிரிசில்டா, அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் சாடி இருந்தார்.
மீண்டும் அதிரடி காட்டும் ஜாய் கிரிசில்டா
இந்த நிலையில், தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார் ஜாய் கிரிசில்டா. அந்த புகாரில், தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கிழி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கான ஒப்பந்தம் வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது, அதுமட்டுமின்றி தன்னுடைய 2 குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுவதால் இந்த வழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஜாய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

