- Home
- Cinema
- ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்தாச்சு... மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்தாச்சு... மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்து சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா பதிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Madhampatty Rangaraj vs Joy Crizildaa
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்தது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜை விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார். அந்த பதிவுகளில் மாதம்பட்டி ரங்கராஜின் பாகசாலா நிறுவனங்களையும் ஜாய் டேக் செய்திருந்தார். இதையடுத்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்து சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
மாதம்பட்டி தரப்பு வாதம்
இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். இந்த விசாரணையின் போது மாதம்பட்டி பாகசாலா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவின் இந்த பதிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதாகவும், அதனால் அவருடைய சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
ஜாய் கிரிசில்டா தரப்பு வாதம்
அதேபோல் ஜாய் கிரிசில்டா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்த சமூக வலைதள பதிவுகளால், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை பற்றியோ, அவர்களுடைய வர்த்தக நடவடிக்கை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் எப்படி 12 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும் ஜாய் கிரிசில்டாவின் கருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் வாதங்களை முன்வைத்து இருந்தார்.
தீர்ப்பு என்ன?
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதன்படி ஜாய் கிரிசில்டாவின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா, தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் குஷியில் இருக்கும் ஜாய் கிரிசில்டா இதுகுறித்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

