- Home
- Cinema
- ஜீவஜோதி என்ன உத்தமியா..? சினிமாவில் சரவண பவன் அண்ணாச்சி கேரக்டர்..! செக் வைக்கும் நாடார் சமூகத்தினர் !
ஜீவஜோதி என்ன உத்தமியா..? சினிமாவில் சரவண பவன் அண்ணாச்சி கேரக்டர்..! செக் வைக்கும் நாடார் சமூகத்தினர் !
ஜீவஜோதியை பயன்படுத்தி அவரது தாய்மாமன்கள் அண்ணாச்சியிடம் பணம் பறித்து விட்டார்கள். ஆக, அண்ணாச்சிக்கு எதிரானவர் ஜீவஜோதி என்பதை ஏற்க முடியாது. ஜீவஜோதி, அண்ணாச்சிக்கு உடன்பட்டே இருந்தார்’’ என்கிறார் அண்ணாச்சியின் வழக்கறிஞர்.

அண்ணாச்சியின் ‘ராக்ஸ்டார்’ கதை
தமிழ்சினிமாவில் இப்போதைய ஹாட் டாபிக் சரவண பவன் அண்ணாச்சி பி.ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான். இந்தப் படத்தை இயக்கப் போவடு 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் என்பது ஒருபக்கம் எதிர்பார்ப்பைக் கூட்ட, மறுபக்கம் இதில் அண்ணாச்சியாக நடிக்கப்போகும் நடிகர் பற்றிய தகவல்கள் கோலிவுட்டையே அதிர வைக்கின்றன.
அதற்கு முன் ஒரு ஃப்ளாஷ்பேக்.
சரவண பவன் என்னும் உலகப் பிரபலமான தென்னிந்திய உணவகத்தை தொடங்கி ராஜகோபால், தூத்துக்குடி, புன்னையாடி கிராமத்தில் பிறந்து பின்னணியில் இருந்து உலகளாவிய வெற்றியைத் தொட்டவர். அவரை ஊழியர்களும், நண்பர்களும் ‘அண்ணாச்சி’ என்று ஊர்ப்பாசத்தோடு அழைத்தனர். அவரது வாழ்க்கை வரலாறு, ஒரு உண்மையான ‘ராக்ஸ்டார்’ கதையைப் போன்றது .
அண்ணாச்சியின் மீது விசுவாசம்
1960களின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்த ராஜகோபால், 1968-ல் சென்னை, கே.கே.நகரில் ஒரு சிறிய பெட்டிக் கடையைத் தொடங்கினார். அது வெற்றி பெற்றது. 1973-ல் பொதுவான பொருட்கள் கடையாக விரிவாக்கினார். ஜோதிடரின் ஆலோசனையின்படி ‘தீ’ தொடர்பான தொழிலைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டதால், 1981-ல் கே.கே.நகரில் சிறிய உணவகமாக சரவண பவன் ஹோட்டலைத் தொடங்கினார்.
ராஜகோபால் அண்ணாச்சியின் கனவு, இட்லி, தோசை, வடை, சாம்பார் போன்ற உணவுகளை குறைந்த விலையில் உயர்தரமாக வழங்குவதாக இருந்தது. சமையல் அறைகளை திறந்து வைத்து வெளிப்படையான தரத்தை உறுதி செய்தார்.
இந்திய உணவகத் துறையில் முன்னோடியாக, ஊழியர்களுக்கு ஓய்வூதியம், இலவச சுகாதாரம், வீட்டுக்கடன், பெண் குழந்தைகளுக்கான திருமண நிதி, கல்வி உதவி போன்றவற்றை வழங்கினார். இதனால் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவரை ‘அண்ணாச்சி’ என்று அழைத்து விசுவாசமாக இருந்தனர்.
தோசா கிங் திரைப்படம்
1990 களில் சிங்கப்பூரில் மெக்டானால்ட்ஸ் போன்றவற்றைப் பார்த்து ஃப்ரான்சைஸ் மாதிரியை அறிமுகப்படுத்தினார். 2000-ல் துபாயில் முதல் வெளிநாட்டு கிளை. 33 இந்திய கிளைகள் என அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகெங்கிலும் 92 கிளைகளை உருவாக்கினார் ஆண்டு வருமானம் ரூ3,000 கோடிக்கும் மேல் சென்றது.
உச்சம் தொட்ட ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கையின் இறுதிக்காலம் சர்ச்சைகளால் சூழப்பட்டது. 2001-ல், ஜோதிடரின் ஆலோசனையின்படி மூன்றாவது மனைவியை மணம் செய்ய விரும்பினார். அவரது ஊழியரின் மகள் ஜீவஜோதிக்கு அப்போது 20 வயது. அந்த இளம் பெண்ணை மணக்க விரும்பினார். ஜீவஜோதி அதை ஏற்காமல் சரவண பவன் ஊழியர் பிரின்ஸ் சந்தகுமார் காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அண்ணாச்சி 5 பேருடன் சந்தகுமாரை கடத்தி, கொலை செய்து கொடைக்கானல் அருகே உடலை வீசினர்.
2004-ல் 10 ஆண்டு சிறை, 2009-ல் உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை. 2019 மார்ச் வரை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால், ஹார்ட் அட்டாக்கால் மரணமடைந்தார். பிரின்ஸ் சாந்தகுமார் இறப்புக்கு பிறகு தஞ்சைக்கு வந்த ஜீவஜோதி தனது பள்ளி நண்பர் தண்டாயுதபாணியை மறுமணம் செய்து கொண்டு தஞ்சையை அடுத்த திருமலை திருமலைசமுத்திரத்தில் தனது தந்தை ராமசாமி பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்ட பாஜகவில் முக்கியப்பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் ஜீவஜோதியின் வாழ்க்கைக் கதை, 'தோசா கிங்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதைத் த.செ. ஞானவேல் இயக்குகிறார்.
மிரட்டலால் விலகும் நடிகர்கள்
இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்தப் படத்தில் அண்ணாச்சியாக நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட நடிகர், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான மோகன்லால். இப்போது திடீரென இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார். அவர் ஏன் விலகினார் என்பது இன்னும் மில்லியன் டாலர் கேள்வி. அவர் விலகியதற்கான காரணத்தைக் கோடம்பாக்கம் முழுக்கத் தேடினாலும், தெளிவான பதில் கிடைக்கவில்லை.
ஆனால், இந்தப் படத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட சில நடிகர்கள், நாடார் சமூகத்தின் உயர்மட்ட பிரபலங்களிடம் இருந்து வந்த அழுத்தமான மிரட்டல்களால் விலகியதாக ரகசியத் தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த அழுத்தம்தான் மோகன்லால் விலகலுக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.
அண்ணாச்சி கேரக்டருக்கு பொருத்தமான புஸ்ஸி ஆனந்த்
இன்னொரு பக்கம், ரசிகர்களோட இதயத்தை ஒரு காலத்துல கொள்ளை அடிச்ச ஒரு முன்னணி நடிகை, சமீபத்தில் ஒரு வயதான 'ஆண்டி ரோலில்' திரைக்குத் திரும்பி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினாரே.. அவர் இந்தப் படத்துல ஜீவஜோதி கதாபாத்திரத்தை ஏற்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. டைம்ஸ் குழுமத்தின் ஜங்லீ பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதைக்கான சட்டப்பூர்வ உரிமைகளை ஜங்லீ பிக்சர்ஸ் பெற்றுவிட்டதால், உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இந்த சொல்லப்படாத கதை எப்படியும் திரைக்கு வந்தே தீரும் என்கிறார்கள்.
இப்போதைய ஹாட் அப்டேட் அண்ணாச்சி ராஜகோபால் கேரக்டருக்கு, மோகன் லால் விலகியதால் சத்யராஜை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சரத்குமார் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் த.செ.ஞானவேல் நினைக்கிறார். ஆனாலும், சரத்குமார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு அவர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. சத்யராஜைத் தொடர்ந்து, அடுத்த தேர்வாக நடிகர் ராஜ்கிரண் இருக்கலாம் என கோடம்பாக்கத்தில் தகவல். இந்தக் கலவரத்தில் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் அண்ணாச்சி கேரக்டருக்கு பொறுத்தமாக இருப்பார் என பரும் சீரியஸாகவே சிபாரிசு செய்து வருகின்றனர்.
அண்ணாச்சியுடன் ஒத்துழைத்து நடந்த ஜீவஜோதி..?
இந்நிலையில், ராஜகோபால் அண்ணாச்சியின் வழக்கறிஞர், ‘‘ஜீவஜோதியை தியாகியாக இந்தப்படத்தில் சித்தரிக்க நினைக்கிறார்கள். ஜீவஜோதி ஒன்றும் உத்தமி கிடையாது. அண்ணாச்சியுடன் ஒத்துழைத்து நடந்தவர்தான். நானே அண்ணாச்சி கொடுத்தனுப்பிய நகைகளை பலமுறை ஜீவஜோதிக்கு கொண்டுபோய் கொடுத்துள்ளேன். அதை மறுக்காமல் புன்னகையோடு வாங்கிக் கொள்வார். பலமுறை தனிமையில் அண்ணாச்சியை சந்தித்து இருக்கிறார். அண்ணாச்சி தஞ்சாவூர் சென்றால் ஜீவஜோதி வீட்டில் இருந்துதான் அவருக்கு சாப்பாடே வரும். ஜீவஜோதியை பயன்படுத்தி அவரது தாய்மாமன்கள் அண்ணாச்சியிடம் பணம் பறித்து விட்டார்கள். ஆக அண்ணாச்சிக்கு எதிரானவர் ஜீவஜோதி என்பதை ஏற்க முடியாது. ஜீவஜோதி, அண்ணாச்சிக்கு உடன்பட்டே இருந்தார்’’ என்கிறார் அண்ணாச்சியின் வழக்கறிஞர்.