காஃபி குடிச்சே வெயிட் லாஸ் பண்ணிய ஜான்வி கபூர்; அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?
ஜான்வி கபூரின் எனர்ஜி சீக்ரெட் மற்றும் அவரின் வெயிட் லாஸுக்கு பெரிதும் உதவியது காஃபி தானாம். அதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று பார்க்கலாம்.
Janhvi Kapoor
காபிங்கிறது சும்மா ஒரு டிரிங்க் இல்ல. அது நம்ம சவுத் இந்தியன்ஸ்க்கு ஒரு எமோஷன். அது ஒரு ஃபீலிங். ஃபில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி எல்லாத்தோட வாசனையும், டேஸ்ட்டும் தெரிஞ்சவங்களுக்குத்தான் புரியும். காலையில எழுந்தவுடனோ, இல்லன்னா சாயந்திரம் வீட்லயே காபி போட்டு குடிக்கிற சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனா, இப்போ எல்லாம் பிளாக் காபி ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டு வருது.
Janhvi Kapoor Energy Secret
பால், சர்க்கரை எதுவும் போடாம, சும்மா காபி குடிக்கிற இந்த ட்ரெண்ட் இப்போ எல்லாரும் ஃபாலோ பண்றாங்க. ரெஸ்டாரன்ட்ல, கஃபேல எல்லாம் பிளாக் காபி கிடைக்குது. இதோட நன்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டு சில பேர், மத்த டிரிங்க்ஸ விட்டுட்டு பிளாக் காபி குடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சில பேர் ட்ரெண்டுக்காக குடிக்கிறாங்க. பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் அப்படித்தான். பிளாக் காபி குடிக்கிறதனால அவங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குதுன்னு அவங்க சொல்றதைக் கேட்போம்.
இதையும் படியுங்கள்... தரையை விட தண்ணீர்ல நடந்தால் '2' மடங்கு நன்மைகள்.. எப்படி நடக்கனும் தெரியுமா?
Janhvi Kapoor Favourite Black Coffee
1) காபில கேஃபின் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால பிளாக் காபி எனர்ஜி பூஸ்ட்டரா இருக்கு. வேலை செய்ய எனர்ஜி, கான்சன்ட்ரேஷன், ஆக்டிவ் மைண்ட் எல்லாம் இதனால கிடைக்கும். அளவா குடிச்சாத்தான் இந்த நன்மை கிடைக்கும்.
2) சர்க்கரை வியாதி இருக்கறவங்களுக்கு காபி நல்லது. ஆமா. காபி குடிச்சா இன்சுலின் சுரப்பு அதிகமாகும். டைப் 2 டயாபடீஸ் வராம தடுக்கும். ஆனா, பால், சர்க்கரை போடாம குடிக்கிற பிளாக் காபிதான் ரொம்ப நல்லது.
3) உங்களுக்கு பித்தப்பை இல்லன்னா லிவர் பிரச்சினை இருக்கா? ஃபேட்டி லிவர் மாதிரி பிரச்சினைகள் இருக்கா? அப்போ பிளாக் காபி உங்களுக்கு நல்லது. லிவர் பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி இதுக்கு இருக்கு. ஆனா, அளவா குடிக்கணும்னு மறந்துடாதீங்க.
4) காபில இருக்கிற கேஃபின் உங்க மனநிலையை சரி பண்ணும். அதனால டெப்ரஷன் பிரச்சினைக்கும் இதுல ஒரு தீர்வு இருக்கு. சோகமா இருக்கிற மனநிலையை உடனே சந்தோஷமா மாத்தும் சக்தி பிளாக் காபிக்கு இருக்கு.
Janhvi Kapoor Fitness Secret
5) கேஃபின் நம்ம உடல் வேலைகளையும் அதிகப்படுத்தும். அதிகமா வேலை செய்றவங்க, உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்றவங்க, ஒரு காபி குடிச்சா எனர்ஜி அதிகமாகும், ஆக்டிவ்வா இருக்கலாம்.
6) பக்கவாதம் மாதிரி பிரச்சினைகளையும் கேஃபின் குறைக்கும். இல்லன்னா வராம தடுக்கும். கேஃபின்ல நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிற குணம் இருக்கறதால, நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட மனப்பிரச்சினைகள், மத்த பிரச்சினைகள் வராம இல்லன்னா அந்தப் பிரச்சினைகளோட ரிஸ்க் குறையும். அதனால அல்சைமர்ஸ் மாதிரி பிரச்சினைகள் வராம கொஞ்சம் தடுக்கும்.
7) சில சமயங்கள்ல வெயிட் குறைக்கறதுக்கும் இது உதவும். நேரடியா இல்லன்னாலும், வெயிட் குறைக்க, மெட்டபாலிசத்தை ஆக்டிவ்வா வைக்க இது உதவும்.
8) பிளாக் காபி குடிச்சா தண்ணி குடிக்கிற பழக்கம் அதிகமாகும். தாகம் எடுக்கும். அதனால, நிறைய தண்ணி குடிச்சு, உடல்ல நீர்ச்சத்து குறையாம இருக்க இது மறைமுகமா உதவும்.
இதையும் படியுங்கள்... 1 கிளாஸ் ஓம வாட்டர் போதும் எடை தானா குறையும்!