Coolie : கூலி படத்தில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் விஜய் பட ஹீரோயின்! அடடே இவரா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பிரபல நடிகை குத்தாட்டம் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினியும் அவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதுதவிர பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கூலி படத்தில் குத்துப்பாட்டு
கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் கூலி திரைப்படத்தில் இருந்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கூலி படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள குத்துப் பாடலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து பிரபல நடிகை குத்தாட்டம் போட உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... ரஜினியின் கூலி பட ஷூட்டிங் எப்போ முடியும்? சூப்பர் ஸ்டார் சொன்னது இதுதான்!
ரஜினியுடன் ஆடும் பூஜா ஹெக்டே
அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தான். இவர் தான் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து குத்தாட்டம் போட இருக்கிறாராம். ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலைப் போல் இப்படம் செம ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடியுள்ள பூஜா ஹெக்டே, தமிழில் கூலி படத்தில் தான் முதன்முறையாக ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளார்.
பூஜா ஹெக்டே லைன் அப்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் செம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் காஞ்சனா 4 படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படி பிசியான ஹீரோயினாக நடிக்கும் போதே அவர் கூலி படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகவும் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினியின் செண்டிமெண்ட்; அதே நாளையே 'கூலி' ரிலீசுக்கு முடிவு பண்ணிய சன் பிச்சர்ஸ்!