ரஜினியின் கூலி பட ஷூட்டிங் எப்போ முடியும்? சூப்பர் ஸ்டார் சொன்னது இதுதான்!
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
coolie rajinikanth
ரஜினியின் அடுத்த திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கூலி திரைப்படத்தின் சூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Coolie
கூலி பட சூட்டிங்
இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் படக்காட்சிகள் பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டிணம் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி திரைப்பட குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியாட்கள் யாருக்கும் சூட்டிங் பகுதியில் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
coolie
இறுதி கட்டத்தை எட்டிய கூலி
கடந்த மாதம் திடீரென் உடல்நிலை பாதிப்பு காரணாமக ரஜினிகாந்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஒரு மாத காலம் கூலி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்படிப்பு சூடு பிடித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே தாய்லாந்தில் நடைபெறும் கூலி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தார்.
coolie rajinikanth
அரசியல் வேண்டாம்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம், கூலி படத்தின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கூலி பட சூட்டிங் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன் என ரஜினி காந்த் கூறினார்