- Home
- Cinema
- கருப்பு பட லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜனநாயகன்... சூர்யாவை ஓவர்டேக் பண்ணிய விஜய்..!
கருப்பு பட லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜனநாயகன்... சூர்யாவை ஓவர்டேக் பண்ணிய விஜய்..!
Jana Nayagan vs Karuppu : நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜனநாயகன் திரைப்படம், ரிலீஸ் ஆன மூன்றே வாரத்தில் கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

Jana Nayagan Beat Karuppu
தமிழ் சினிமாவில் 2026-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்க படங்களில் ஒன்று தான் ஜனநாயகன். விஜய், ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பதால் இதன்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் படக்குழுவினர் நீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்தியதால் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதம் ஆனது. அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஜனநாயகன் படம் அப்படியே முடங்கிப்போனது.
Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்
ஜனநாயகனை கொண்டாடிய ரசிகர்கள்
இப்படி பல்வேறு தடைகளை தாண்டி அப்படம் ரிலீஸ் ஆனதும் ஒரு நல்லது தான் என விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். ஏனெனில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தால் வெறுமனே தளபதி விஜய்யின் கடைசி படமாக அது இருந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆனதால், அது முதல்வர் விஜய்யின் முதல் படமாக அமைந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில் என டைட்டில் கார்டில் விஜய் பெயரை பார்த்ததும் ரசிகர்கள் சிலாகித்துப் போயினர். இதனால் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத படமாக ஜனநாயகன் மாறியது.
லீக் ஆன பின்னும் வசூல் வேட்டை
வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்னர் இணையத்தில் லீக் ஆகிவிட்டால், அப்படம் நிச்சயம் பிளாப் தான் என சொல்லிவிடலாம். இதற்கு முன் சில படங்கள், அவ்வாறு லீக் ஆகி படுதோல்வியை சந்தித்திருக்கின்றன. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இது ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தாலும், விஜய்யின் கடைசி படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் நோக்கி படையெடுத்து வந்து இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
ஜனநாயகன் வசூல்
அதன் பலனாக ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்படம் 18 நாட்களில் உலகளவில் 318 கோடி வசூலித்து உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.142 கோடி வசூலித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.13 கோடியும், கேரளா மற்றும் கர்நாடகாவில் ரூ.47 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.22.1 கோடியும், ஓவர்சீஸில் ரூ.94 கோடியும் வசூலித்து இருந்தது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையை ஜனநாயகன் படைத்துள்ளது.
கருப்பு சாதனை முறியடிப்பு
இதற்கு முன்னதாக சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் 308 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் முறியடித்து உள்ளது. இப்படம் இணையத்தில் லீக் ஆகாமல் இருந்திருந்தால் 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை லியோ தான் தக்க வைத்து உள்ளது. அந்த சாதனையை ஜனநாயகன் படத்தால் முறியடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

