- Home
- Cinema
- ஒரே நாளில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் 2 ஆடியோ லாஞ்ச்.... ஜனநாயகன் - பராசக்தி இடையே முற்றும் மோதல்
ஒரே நாளில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் 2 ஆடியோ லாஞ்ச்.... ஜனநாயகன் - பராசக்தி இடையே முற்றும் மோதல்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் ஒரே நாளில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன.

Jana Nayagan vs Parasakthi
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கப்போகிறது. அப்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தியும் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருக்கிறார். ஜனநாயகனை கேவிஎன் நிறுவனம், பராசக்தியை டான் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்த இரு படங்களில் ஜனநாயகன் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வருகிறது. அப்படம் ரிலீஸ் ஆன மறுதினம் தான் பராசக்தி ரிலீஸ் ஆகிறது.
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்
ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிக பிரம்மாண்டாமாக நடத்தி முடித்துள்ளனர். 90 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்வு மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்று உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தற்போது திரும்பியபக்கமெல்லாம் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் பற்றிய பேச்சுக்கள் தான் உள்ளன.
பராசக்தி இசை வெளியீட்டு விழா
பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 3-ந் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவை படக்குழுவினர் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25-வது படம் இது என்பதால், அதை கொண்டாடும் விழாவாக இது இருக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 100வது படமாகும்.
இசை வெளியீட்டிலும் போட்டி
இப்படி ஜனநாயகன் மற்றும் பராசக்தி திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் வெவ்வேறு தேதியில் நடத்தப்பட்டாலும் அதனை ஒரே நாளில் தான் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்களாம். ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 4-ந் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. அதே நாளில், அதே நேரத்தில் சன் டிவியில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பட இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். முந்தைய நாள் ஆடியோ லாஞ்ச் முடிந்ததும் வேக வேகமாக எடிட் செய்து ஜனவரி 4-ந் தேதி ஒளிபரப்ப உள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

