- Home
- Cinema
- ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Jana Nayagan vs Parasakthi Pongal Clash
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்களின் மோதல் தான். முதலில் ஜனவரி 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த பராசக்தி திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி ஜனவரி 10-ந் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியானது. இதற்கு மிக முக்கிய காரணம் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு பெரியளவில் திரையரங்குகள் கிடைக்ககூடாது என்பது தான் என பலரும் சாடுகின்றனர். ஏனெனில் பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சியால் தான் ஜனநாயகன் போட்டியாக பராசக்தி வருகிறது என பலரும் கூறி வருகின்றனர்.
நெருக்கடியில் ஜனநாயகன்
விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரிலீஸ் தேதியை மாற்றியதாக பராசக்தி தயாரிப்பு தரப்பு சப்பைக்கட்டு கட்டுகிறது. தற்போது ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்களுக்குமே சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும். அதிலும் பராசக்தி ரெட் ஜெயண்ட் வெளியீடு என்பதால், இருக்கும் பெரிய ஸ்கிரீன்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துவிடும். இதனால் சின்ன ஸ்கிரீன் மற்றும் குறைந்த அளவிலான இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் மட்டுமே ஜனநாயகனுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கப் சிப்னு இருக்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருவதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக 2022-ம் ஆண்டு ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாகும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் ராஜமெளலி மீதுள்ள மரியாதையால் அப்படத்துடனான மோதலை தவிர்த்தார் எஸ்.கே. இதையடுத்து 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் எஸ்.கே. ஆனால் அப்போது ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ரஜினியுடன் மோத வேண்டாம் என முடிவெடுத்து ரிலீஸ் தேதியை மாற்றினார்.
நன்றி மறந்த எஸ்.கே?
இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு விஜய் தன்னுடைய கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்தது மட்டுமின்றி அவர் கையில் துப்பாக்கியையும் கொடுத்து அவரை அடுத்த தளபதி ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். ஆனால் அந்த நன்றியுணர்வு துளியும் இல்லாமல், விஜய்யின் கடைசி படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதாக ரசிகர்கள் சாடி வருகின்றனர். ரஜினி, ராஜமெளலிக்கு கொடுத்த மரியாதையை விஜய்க்கு சிவகார்த்திகேயன் கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் படத்துடன் மோதுவதால் பராசக்தி படத்திற்கும் அது பாதிப்பு தான். அப்படம் தனியாக வந்தால் பெரியளவில் வசூலிக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

