- Home
- Cinema
- துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
Jana Nayagan vs Parasakthi : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் 10ஆம் தேதியே வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sudha Kongara Parasakthi Update
விஜய்யிடமிருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கி பெற்றதைத் தொடர்ந்து அவரது இடத்தை எஸ்கே பிடித்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அவரது படத்திற்கே போட்டியாக தனது படத்தை வெளியிட இருக்கிறார் அது என்ன என்று பார்க்கலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இப்போது ஜனவரி 10ஆம் தேதியே வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
Parasakthi Sivakarthikeyan Movie
விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள படம் தான் ஜன நாயகன். 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் அவரது தேர்தல் பரப்புரை காரணமாக தமிழகத்தில் போதுமான திரையரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Parasakthi Movie
விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதை மனதில் வைத்துதான் எப்போதும் இல்லாத திருநாளாக இந்த முறை விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கிறது. பொதுவாக விஜய் படம் வெளியாகிறது என்றால் இசை வெளியீட்டு விழா சென்னையில் தான் நடக்கும். ஆனால் இந்த முறை வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது.
Sivakarthikeyan Parasakthi New Release Date
இந்த சூழலில் தான் பராசக்தி படத்தை முன் கூட்டியே வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதோடு வசூலும் அதிகரிக்கும். ஏனென்றால், 10ஆம் தேதி சனிக்கிழமை. அப்படியே வார விடுமுறை. 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து 14ஆம் தேதி போகிப் பண்டிகை, 15ஆம் தேதி வியாழக்கிழமை பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி உழவர் திருநாள், 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இப்படி பார்த்தால் மொத்தமாக 7 நாட்கள் வரும். இதில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டால் கூடுதலாக 2 நாட்கள் என்று மொத்தமாக 9 நாட்கள் கிடைக்கும். இதன் மூலமாக பராசக்தி படத்தின் வசூலும் மேலும் அதிகரிக்கும்.
Parasakthi New Release Date
இந்த சூழலில் தான் ஜன நாயகன் 9ஆம் தேதியும், பராசக்தி 10ஆம் தேதியும் வெளியாகிறது. இதில் ஜன நாயகன் மட்டும் ஹிட் கொடுத்துவிட்டால் பராசக்தி படத்தின் வசூல் ரொம்பவே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது ஜிவியின் 100ஆவது படம். எஸ்கேயின் 25ஆவது படம். முதல் முறையாக பெண் இயக்குநரான சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
Coming to you, earlier than expected 🔥#Parasakthi - in theatres worldwide from January 10th, 2026 ✊
Get ready for a ride through history🚂#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan@Sudha_Kongara@iam_ravimohan@Atharvaamurali@gvprakash@DawnPicturesOff… pic.twitter.com/HigIPxkYFL— DawnPictures (@DawnPicturesOff) December 22, 2025
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.