MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ்நாட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல... நீங்க வாங்க விஜய்! தளபதியின் அரசியல் பேச்சை ஆதரித்த பிரபலம்

தமிழ்நாட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல... நீங்க வாங்க விஜய்! தளபதியின் அரசியல் பேச்சை ஆதரித்த பிரபலம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது குறித்தும், அவர் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பேசியது குறித்தும் பிரபல இசையமைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 20 2023, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vijay

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தனது அரசியல் எண்ட்ரியை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக தான் அவரின் சமீபத்திய கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா இருந்தது. அதில் அவர் பேசிய பேச்சும் அவரின் அரசியல் ஆசையை ஆங்காங்கே வெளிப்படுத்தி இருந்தன. விஜய் அரசியல் வருகை குறித்து பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்தன் விஜய்யின் அரசியல் வருகையை ஆதரிக்கும் விதமாக பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : “234 தொகுதிகளிலும் 10, 12 வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்க்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை நடத்திய விஜய், இதைவிட வெளிப்படையாக தன் அரசியல் நோக்கத்தை மக்களுக்குச் சொல்லியிருக்க முடியாது. அந்தத் துணிவிற்கும், தெளிவிற்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அதைத் தேர்ந்தெடுத்த தளமும் அற்புதமானது. இது எத்தனை இளம் உள்ளங்களை உற்சாகப்படுத்தியிருக்கும், உத்வேகப்படுத்தியிருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
james vasanthan

james vasanthan

“நீங்கள்தான் எதிர்கால வாக்காளர்கள்” என்று சொன்னதன் மூலம் இதன் பின்னணியில் இருக்கும் அவருடைய அரசியல் கணக்குகளையும் அவர் பகிரத் தயங்கவில்லை. அவருடைய தோற்றம், உடல் மொழி, பேச்சு எல்லாமே அவருடைய எண்ணங்களை கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியது. பொதுநிகழ்வுகளில் தோன்றுவதற்கும், பேசுவதற்கும் கூச்சப்பட்ட காலம் போய், இன்று அரசியலுக்குள் குதித்து, தலைமையேற்க நினைக்கும் தன் விருப்பத்தை கொஞ்சமும் தயக்கமின்றி தெளிவாகச் சொல்லும் நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருப்பது மிகப்பெரிய, உறுதியான மாற்றம்.

தான் நடிக்கிற படங்களின் திரைக்கதையையே படிக்கும் ஈடுபாடு இல்லாதவர் இன்று புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்று சொல்வது அவருக்குள் ஏற்பட்டிருக்கிற தேடலின் சான்று. இது பல இளைஞரை படிக்கத் தூண்டும் என்பது திண்ணம். ஒவ்வொரு நடிகரும் ஒரு காலகட்டத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும்போது எதிர்கொள்கிற விமர்சனங்களை விஜய்யும் சந்தித்துதான் ஆகவேண்டும். அது ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன்.

இதையும் படியுங்கள்... உதயநிதியின் கடைசி படத்துக்கு வந்த சிக்கல்... மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு- பின்னணி என்ன?

34
Vijay

Vijay

பொதுநலச் சிந்தனையுள்ளவர்தானே அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து சிந்திப்பார்? இது வரவேற்கப்பட வேண்டிய விஷயந்தானே? அரசியலில் உள்ளவரின் குடும்பத்தினர் வந்தாலும் விமர்சனம்; அரசியல் தொடர்பே இல்லாதவர் வந்தாலும் விமர்சனம் என்றால் பிறகு யார்தான் வரவேண்டும்? மக்களிடையே ஏற்கனவே செல்வாக்கு உள்ளவர் தனக்கிருக்கும் புகழையும், அந்தஸ்தையும் அவர்கள் நலனுக்கென்று செலவழிக்க நினைப்பது ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே?

விஜய்யை எடுத்துக்கொண்டால், அவர் இன்று ஒரு படத்துக்கு எவ்வளவு ஊதியம் வாங்குகிறார் என்பது தெரிந்த செய்திதான். வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் செய்கிறார். தொழிலின்,  புகழின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு மூன்று தலைமுறைகள் அமர்ந்து உண்ணக்கூடிய செல்வம் இருக்கும்போது அவர் எதற்காக அரசியலுக்கு வருவதன் மூலம் தன் வருமானத்தையும் கெடுத்துக்கொண்டு, தன் சேமிப்பையும் இழந்து, பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டும்? 

44
vijay

vijay

இதையெல்லாம் சிந்திக்காமலா இந்த முடிவை எடுத்திருப்பார்? அப்படியென்றால், அதையும் தாண்டிய ஒரு மக்கள் நல நோக்கம் இருக்க வேண்டுமல்லவா? அவர் வருவது அவர் முடிவு. அவர் வரட்டும், பேசட்டும், செயல்படட்டும். நம்பினால் மக்கள் வாக்களிப்பர், இல்லையென்றால் ஒதுக்குவர். களத்தில் எதிர்கொண்டு அவர் கருத்துகளை விமர்சிப்பது தகுதியாயிருக்கும். வாங்க விஜய்! தமிழ்நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல திட்டங்களை வகுங்கள்! அறிவார்ந்த தமிழ்ச்சமூகம் பொருத்தமானவரை ஆதரிக்கும்!” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அவ்ளோதான் இதுக்கு மேல எல்சியூ படங்கள் கிடையாது - அதிரடியாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved