அவ்ளோதான் இதுக்கு மேல எல்சியூ படங்கள் கிடையாது - அதிரடியாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், எல்சியூ எப்போது முடிவடையும் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
lokesh kanagaraj, Vijay
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தியுடன் கூட்டணி அமைத்து கைதி படத்தை இயக்கினார் லோகேஷ். இப்படம் அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது. கைதி படம் பார்த்து இம்பிரஸ் ஆன தளபதி விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுத்தார். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், மாஸ்டர் படத்தை மாஸ் படமாக இயக்கி வெற்றி கண்டார்.
Lokesh kanagaraj, Kamalhaasan
இதன்பின்னர் தன்னுடைய குருவான கமல்ஹாசன் உடன் கூட்டணி சேர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் என்கிற தரமான ஆக்ஷன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே மிரள வைத்தார். அதுமட்டுமின்றி இதில் எல்சியூ என்கிற கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்தினார். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் எல்சியூ கன்செப்ட் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது. விக்ரம் சக்சஸுக்கு பின் விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்கள்... அப்பா ஆனார் RRR நாயகன்... ராம்சரண் - உபாசனா ஜோடிக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் குழந்தை
Lokesh kanagaraj
லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. இப்படத்திற்கான அப்டேட்டுக்காக தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். விஜய் பிறந்தநாளன்று லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஆல்டர் ஈகோ என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பாடலை விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Lokesh kanagaraj
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எல்சியூ பற்றி பேசி இருந்தார். லியோ எல்சியூவில் வருமா, இல்லையா என்பது இன்னும் மூன்று மாதத்தில் உங்களுக்கு தெரியவரும் என கூறிய அவர், எல்சியூவில் 10 படங்கள் தான் இயக்குவேன், அதன்பின் நிறுத்திவிடுவேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். எல்சியூ படங்கள் இயக்கும்போது வெவ்வேறு தயாரிப்பாளர்களிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என நிறைய விஷயங்கள் இருப்பதாலும், ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் மகன் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே? பிள்ளையின் நடை அழகை வர்ணிக்கும் தந்தை! வைரல் புகைப்படம்!